இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. யார் யாருக்கு இடம்?
இங்கிலாந்து அணிக்கு எதிராக 15 பேர் கொண்ட இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணிக்கு வீகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி திரும்பியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக 15 பேர் கொண்ட இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணிக்கு வீகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி திரும்பியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி 5டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி ஜனவரி 22இல் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இரண்டாவது டி20 போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்தது. இத்தொடரில் எந்தெந்த வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது.
இந்தச் சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் கூடிய தேர்வாளர்கள் இந்திய அணியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளனர். இந்திய டி20 அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கழித்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அணிக்குத் திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் - கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்மிக்கை ..!
இந்திய அணி விவரம் வருமாறு: சூரியகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, நிதிஷ் ரெட்டி, ரிங்கு சிங், அர்ஷத் படேல் (து.கீப்டன்), ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னாய்.
இதையும் படிங்க: இந்தி தேசிய மொழி அல்ல..மேடையில் கிளீன் போல்ட் செய்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்!