×
 

ரோஹித் சர்மா, விராட் கோலியின் மோசமான ஃபார்ம்- இந்திய அணி நிர்வாகம் எடுத்த அதிரடி..! அட, பும்ராவுக்குமா..?

. இந்தத் தொடரில் இதுவரை, அணியின் இரண்டு ஜாம்பவான்களான கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் பிஸியாக உள்ளது. மெல்போர்ன் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி இந்தத் தொடரில் பின்னடவை சந்தித்துள்ளது. இந்தத் தொடரில் இதுவரை, அணியின் இரண்டு ஜாம்பவான்களான கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது. இருவர் மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இருவரையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இதுபோன்ற மோசமான பார்முக்கு இடையில், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய பின்னர் நட்சத்திர வீரர்கள் இருவரும் விடுமுறையில் செல்வார்கள் என்றும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரைத் தவிர, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் இந்தத் தொடரில் இருந்து ஓய்வு எடுப்பார்.

இதையும் படிங்க: தட்டுக்கெட்டுப்போன ரோஹித்தின் நிலைமை..! நாலாபக்கமும் அடி... ஆனாலும் அதுக்கு இப்போ வாய்ப்பே இல்ல ராசாக்களா..!

பணிச்சுமை நிர்வாகத்தை கருத்தில் கொண்டு, மூன்று வீரர்களும் இந்தத் தொடரில் இருந்து ஓய்வு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதன்மூலம், சிட்னியில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அடுத்த ஒரு மாதத்துக்கு இந்த மூன்று வீரர்களும் விடுப்பில் இருப்பார்கள். பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து நேரடியாகத் திரும்புவார்கள்.

இங்கிலாந்து அணி ஜனவரி மாதம் இந்திய சுற்றுப்பயணம் வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 22 முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் பிப்ரவரி 6ம் தேதி தொடங்குகிறது. விராட், ரோஹித் ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

ரோஹித், விராட் விளையாடுவது குறித்து தேர்வுக் குழு இறுதி முடிவை எடுக்கும். இருவரும் இந்தத் தொடரின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்கள். ஜஸ்பிரித் பும்ராவைப் பொருத்தவரை, அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். ஆனால் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி போன்ற போட்டிகளுக்கு தகுதியுடையவராக வைத்திருக்க இந்த முழு சுற்றுப்பயணத்திலிருந்தும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்பது உறுதி. 


இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இது சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்திய அணி கடைசியாக விளையாடும் தொடர். பும்ரா எந்த வகையான ஃபார்மில் இருக்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஓய்வு கொடுப்பதில் ஆச்சரியமில்லை.

இதையும் படிங்க: வெட்கக்கேடான ஆட்டம்... இந்திய அணி தோற்க இளம் வீரர்கள்தான் காரணம்... பழிபோடும் ரோஹித் சர்மா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share