2025 ஐபிஎல் சீசனில் இன்றைய ஆட்டம் குஜராத் அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணியின் பில் சால்ட் 14 ரன்களிலும், தேவுதட் படிக்கல் நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். விராட் கோலி அர்சத் கான் பந்துவீச்சில் 7 ரன்களில் அவுட் ஆனார். அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

42 ரன்களுக்கே பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து ஜிதேஷ் சர்மா மற்றும் லிவிங் ஸ்டோன் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி பெங்களூர் அணிக்காக ரன்களை குவித்தனர். ஜித்தேஷ் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க குர்னல் பாண்டியா ஐந்து ரன்களில் வெளியேறினார். பின்னர் அபாரமாக ஆடிய விவிங்ஸ்டோன் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க: RR கேப்டனாகிறாரா சஞ்சு சாம்சன்? வெளியான முக்கிய தகவல்!!

104 ரன்களில் ஆறு விக்கெட்டுகள் இழந்து பெங்களூர் அணி தடுமாறியது. இறுதியில் களமிறங்கிய டிம் டேவிட், 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடித்து 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 170 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்சன் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் ஷெர்பேன் ரூதர்போர்ட் கூட்டணி நிதனமாக ஆடி ரன்களை குவிக்க தொடங்கினர். ஜோஸ் பட்லர் 73 ரன்களும் மற்றும் ஷெர்பேன் ரூதர்போர்ட் 30 ரன்களும் குவித்தனர். இறுதியாக ஷெர்பேன் ரூதர்போர்ட் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் பெங்களூர் அணியை குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: இதுக்கு எதுக்கு ஸ்ட்ரேடஜிக் டைம் அவுட்... லக்னோவை பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்!!