இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாக்பூரில் தொடங்கியது. இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு டெஸ்ட்- டி20க்குப் பிறகு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி முதல் 2 ஓவர்களில் 11 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.அதில், அவர் ஒரு மெய்டன் ஓவரையும் வீசினார். ஆனால் மூன்றாவது ஓவரை வீச வந்தபோது, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் மனநிலையே மாறிப்போ இருந்தது. அந்த ஓவரில் பில் சால்ட் 26 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ராணாவின் உக்கிர பந்து வீச்சு எடுபடவில்லை.

கேப்டன் ரோஹித் சர்மா நாக்பூர் ஒருநாள் போட்டியில் இரண்டு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினார். இதில், முகமது ஷமியுடன், ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா அணிக்கு வந்தார்.தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் அடித்து 11 ரன்களை விட்டுக் கொடுத்தார் ராணா. மூன்றாவது ஓவருக்கு வந்தபோது, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 26 ரன்களை விட்டுக் கொடுத்தார் ராணா.அடுத்து 10வது ஓவரின் 6 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹாரி பிராகு, பென் டக்கெட் ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தார் ராணா.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்த இரண்டு அணிகளை அடிச்சிக்க முடியாது... ரிக்கி பாண்டிங் சொன்ன இரு அணிகள் இவைதான்.!
#HarshitRana's ball forces an error from #BenDuckett & #YashasviJaiswal grabs a stunner!
Start watching FREE on Disney+ Hotstar ➡ https://t.co/gzTQA0IDnU#INDvENGOnJioStar 1st ODI 👉 LIVE NOW on Disney+ Hotstar, Star Sports 2, Star Sports 3, Sports 18 1 & Colors Cineplex pic.twitter.com/pBfIrT2XlT
— Star Sports (@StarSportsIndia) February 6, 2025
முதல் பவர்பிளேயின் போது ஹர்ஷித் ராணா ஒரே ஓவரில் 26 ரன்கள் எடுத்தபோது, கேப்டன் ரோஹித் சர்மா அவருக்கு நான்காவது ஓவரை கொடுக்கவில்லை. அவர் உடனடியாக ஹர்ஷித்தை விலக்கி வைத்தார். இடைவேளைக்கு பிறகு மீண்டும் 10வது ஓவரில் ஹர்ஷித் ராணாவை இந்திய கேப்டன் பந்து வாய்ப்புக் கொடுத்தார். ராணா தனது வேகப்பந்து வீச்சின் பலத்தை வெளிப்படுத்தி மூன்றாவது பந்தில் டக்கெட்டையும், ஆறாவது பந்தில் புரூக்கையும் அவுட்டாக்கினார்.
இதையும் படிங்க: இந்தியா- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி 2025: ஒரே சில நிமிடங்களில் எல்லாம் காலி… துபாயில் தொடங்க்கிய திருவிழா..!