கடந்த முறை நடந்த சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையைவிட 53 சதவீதம் உயர்த்தி ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஐசிசி வெளியிட்ட அறிவிப்பின்படி, 20லட்சத்து 24ஆயிரம் டாலர்கள் அதாவது ஏறக்குறைய ரூ.20 கோடி பரிசுத் தொகையை சாம்பியன் பட்டம் வெல்லும் அணி பெறும்.
2வது இடம் பிடிக்கும் அணிக்கு அதில் பாதித் தொகை 10 லட்சத்து 12 ஆயிரம் டாலர்கள் அதாவது ரூ.9.12 கோடியை பரிசுத் தொகையாகப் பெறும். அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு ரூ.4.86 கோடியும் கிடைக்கும். ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக ரூ.60 கோடியை ஐசிசி ஒதுக்கியுள்ளது.

ஐசிசி தலைவர் ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பில் “இந்த பரிசுத்தொகை, விளையாட்டில் முதலீடு செய்வதற்கும், நமது விளையாட்டின் உலகளாவிய மதிப்பைப் காப்பாற்ற ஐசிசியின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு: விராட் கோலிக்கு வாய்ப்பு மறுப்பு
குரூப் பிரிவோடு வெளியேறும் அணிக்கு ரூ.30 லட்சம் அதாவது 34 ஆயிரம் டாலர்கள் கிடைக்கும். 5வது அல்லது 6வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.3 கோடியும் 7 மற்றும் 8-வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.1.2 கோடியும் கிடைக்கும். இது தவிர சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கும் பங்கேற்பு உறுதித்தொகையாக தலா ரூ.1.08 கோடி கிடைக்கும்.

கடந்த 1986ம் ஆண்டுக்குப்பின் ஐசிசி தொடர்பான போட்டியை பாகிஸ்தான் முதல்முறையாக நடத்துகிறது. இதில் இந்திய அணி மோதும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி நகரங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன. 1998ம் ஆண்டு முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அற்புதம்..! நரேந்திர மோடி மைதானத்தில் சதம் அடித்து சாதனை: முதல் இந்தியராக சுபமன் கில் அசத்தல்..!