இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது. தற்போது இந்த போட்டி உட்பட முழு தொடரிலும் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தின் மதிப்பீட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதில், சிட்னி மைதானமும் சிறப்பாக இருப்பதாக அறிவித்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அந்த மைதானத்தில் முதல் நாளில் 11 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், இரண்டாவது நாளில் அதிக விக்கெட்டுகள் வீழ்ந்தன. க்ளென் மெக்ராத், சுனில் கவாஸ்கர் உட்பட பல அனுபவமிக்க வீரர்கள் இந்த ஆடுகளம் குறித்து ஆச்சரியம் தெரிவித்ததோடு கேள்விகளையும் எழுப்பினர்.
‘‘இது மிகவும் மோசமான ஆடுகளம்’’என்று விமர்சித்தனர். பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் ஆகிய பிட்ச்கள் 'நல்ல நிலையில் இருந்தன.
இதையும் படிங்க: இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய ரிஷப் பந்த்..! ஆஸி, பந்து வீச்சை தெறிக்கவிட்டு சாதனை..!
சிட்னி மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கருதப்படுகிறது. இந்த முறையும் அதேபோன்ற எதிர்பார்ப்பு இந்த ஆடுகளத்தின் மீது இருந்தது. ஆனால், இங்கு ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டனர். இரண்டரை நாட்களிலேயே போட்டி முடிந்து விட்டது. அந்த மைதானத்தில் வெறும் 1141 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. இந்த மைதானத்தில் நடந்த போட்டிகளில் இவ்வளவு சீக்கிரமாக நடந்த போட்டி இது தான்.
இதற்கு முன் 1931ல் ஆஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான போட்டி 1184 பந்துகளில் முடிந்தது. 1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி 911 பந்துகளில் நடைபெற்ற நிலையில், 1888ஆம் ஆண்டு இந்த அணிகளுக்கும் இடையிலான போட்டியின் முடிவு வெறும் 1129 பந்துகளில் முடிந்தது.
இருந்தபோதும் ஐசிசி அந்த மைதானத்தை‘திருப்திகரமான’ பிரிவில் வைத்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது. தற்போது இந்த போட்டி உட்பட முழு தொடரிலும் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தின் மதிப்பீட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில், சிட்னி மைதானமும் சிறப்பாக இருப்பதாக அறிவித்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அந்த மைதானத்தில் முதல் நாளில் 11 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், இரண்டாவது நாளில் அதிக விக்கெட்டுகள் வீழ்ந்தன. க்ளென் மெக்ராத், சுனில் கவாஸ்கர் உட்பட பல அனுபவமிக்க வீரர்கள் இந்த ஆடுகளம் குறித்து ஆச்சரியம் தெரிவித்ததோடு கேள்விகளையும் எழுப்பினர்.
‘‘இது மிகவும் மோசமான ஆடுகளம்’’என்று விமர்சித்தனர். பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் ஆகிய பிட்ச்கள் 'நல்ல நிலையில் இருந்தன.
சிட்னி மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கருதப்படுகிறது. இந்த முறையும் அதேபோன்ற எதிர்பார்ப்பு இந்த ஆடுகளத்தின் மீது இருந்தது. ஆனால், இங்கு ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டனர். இரண்டரை நாட்களிலேயே போட்டி முடிந்து விட்டது. அந்த மைதானத்தில் வெறும் 1141 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. இந்த மைதானத்தில் நடந்த போட்டிகளில் இவ்வளவு சீக்கிரமாக நடந்த போட்டி இது தான்.
இதற்கு முன் 1931ல் ஆஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான போட்டி 1184 பந்துகளில் முடிந்தது. 1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி 911 பந்துகளில் நடைபெற்ற நிலையில், 1888ஆம் ஆண்டு இந்த அணிகளுக்கும் இடையிலான போட்டியின் முடிவு வெறும் 1129 பந்துகளில் முடிந்தது.
இருந்தபோதும் ஐசிசி அந்த மைதானத்தை‘திருப்திகரமான’ பிரிவில் வைத்துள்ளது. சிட்னி ஆடுகளத்தில் பெரிய புற்கள் இருக்கின்றன. இதனால், பந்துவீச்சாளர்கள் அதிக ஸ்விங்குடன் பந்து வீச முடியும். பேட்ஸ்மேன்களும் விரைவில் அவுட் ஆவார்கள்.
ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத், கடந்த பல ஆண்டுகளாக சிட்னியில் இப்படியொரு ஆடுகளத்தை பார்த்ததில்லை என்று கூறியிருந்தார்.
கவாஸ்கர் கூறுகையில், 'இந்தியாவில் ஒரு நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்தால், உலகம் முழுவதும் விமர்சனம் செய்வார்கள். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப ஆடுகளம் உருவாக்கப்படவில்லை. ஒரு மாட்டைத் தனியாக விட்டால், அது சௌகரியமாகத் தீவனம் உண்ணும் அளவுக்குப் புற்கள் இருந்தது’’ என அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இந்திய அணி தோல்வி: ஆஸ்திரேலிய‘பிட்ச் ரேட்டிங்கை’ வெளியிட்டது ஐசிசி