ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. எனவே, ஐபிஎல் அணிகள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிகழ்வு பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விராட் கோலி பங்கேற்றார். அந்நிகழ்வில் கோலி பேசுகையில்,

“மீண்டுமொரு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் என்னால் பங்கேற்க முடியாது என நான் நினைக்கிறேன். அதனால் கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. அண்மையில் இதே கேள்வியை அணியில் உள்ள இன்னொரு வீரரிடம் நான் கேட்டேன். அவரும் இதே பதிலைதான் சொன்னார். ஆனால், நிறைய பயணம் செய்யலாம்” என விராட் கோலி தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா தட்டித் தூக்குமா.? இந்தியாவின் பலம், பலவீனம் என்ன?

விராட் கோலியின் இந்தக் கருத்தின் மூலம் 2024-25 பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர்தான் அவரது கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் இதன் பிறகு இந்திய அணி 2028-29இல்தான் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். எனவே அதற்கு முன்பாக கோலி ஓய்வு பெற்றுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2024 ஜூனில் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா விராட் கோலி..? பயிற்சியின்போது காயத்தால் அதிர்ச்சி..!