சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்ச்சையை உருவாக்கும் ஒருகாரியத்தை செய்து அதிர்ச்சியை ஏற்படுத்திஇ உள்ளது. பாகிஸ்ஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் குறுகிய சிந்தனையைக் காட்டி விட்டது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு கராச்சி மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய தேசியக் கொடியை ஏற்றவில்லை. சாம்பியன்ஸ் டிராபியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவற்றில் 7 நாடுகளின் கொடிகள் கராச்சியில் உள்ள கடாபி மைதானத்தில் ஏற்றப்பட்டன. ஆனால் இந்திய மூவர்ணக் கொடி அங்கு ஏற்றப்படவில்லை. சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருவதைத் தொடர்ந்து, சர்ச்சையும் எழுந்துள்ளது.

விதியின்படி, ஐசிசி போட்டியின் முதல் போட்டி நடைபெறும் மைதானத்தில் அனைத்து நாடுகளின் கொடியும் ஏற்றப்படும். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விதியைப் பின்பற்றவில்லை. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்குச் செல்லாததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்திய அணி, துபாயில் சாம்பியன்ஸ் டிராபியின் அனைத்து போட்டிகளிலும் விளையாட உள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கள்ளச் சந்தையில் விறுவிறு... ஒரு டிக்கெட் விலை இத்தனை லட்சங்களா..?

இந்திய அணி பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இதனைக் காரணம் காட்டி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல இந்திய அரசிடம் அனுமதி பெறவில்லை. அதனால்தான் பிசிசிஐ தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இதனால் பாகிஸ்தான் எரிச்சலடைந்துள்ளது. ஆகவே இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது கொடி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் எதிர்காலத்தில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை அது மறந்துவிட்டது போல. சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு வந்தால், இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி மீண்டும் கராச்சியில் நடைபெறுவதற்குப் பதிலாக துபாயில் நடைபெறும்.

அதன்பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருபோதும் கொடி அரசியலை துபாயில் செய்ய முடியாது. சொல்லப்போனால், இந்திய அணி போட்டியை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர். முன்பபு இந்த அணி சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி இரண்டு இறுதிப் போட்டிகளில் இந்திய அணியும் பாகிஸ்தானும் மோதியுள்ளன. அதில், ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்று, ஒன்றில் தோல்வியடைந்துள்ளது.
இதையும் படிங்க: 2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் அதிர்ச்சி.. ரோஹித் சர்மா விலகல்..?