ஐபில்-2025 தொடரில் குவாஹாட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்தது.

ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய நிதீஷ் ராணா அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடி அவர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். மறுமுனையில் அவருக்கு உறுதுணையாக விளையாடிய சஞ்சு சாம்சன் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடங்கும்.
இதையும் படிங்க: 'சன் டிவி' காவ்யா மாறனை மிரட்டுவது யார்..? ஐபிஎல் 2025-ல் SRH அணி எடுக்கப்போகும் பரபரப்பான முடிவு..!
அதன் பிறகு, நிதீஷ் ராணாவுடன் கேப்டன் ரியான் பராக் பார்ட்னர் சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய நிதீஷ் ராணா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 36 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார். அவர் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களை விலாசினார். கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளில், 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் குவித்தார்.

ஷிம்ரான் ஹெட்மேயர் 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது,மதீஷா பதிரானா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது.
ஓபனிங் பேட்ஸ்மேனான ரச்சின் ரவிச்சந்திரா, ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய நான்காவது பந்தில் டக் அவுட் ஆனார். துஷார் தேஷ்பாண்டேவின் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் பலத்த காயம் அடைந்தார். கெய்க்வாட் புல் ஷாட்டை விளையாட முயன்றார், ஆனால் பந்தைத் தவறவிட்டார், அது அவரது முழங்கையில் பட்டது.

இதையும் படிங்க: குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி... பவுலர்களிடம் சுருண்ட மும்பை இந்தியன்ஸ் அணி!! தோனி 11 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 16 ரன்களில் ஷிம்ரான் பந்து வீச்சில், சந்தீப் சர்மாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். தோனிக்குப் பிறகு களமிறங்கிய ஜாமீய் ஓவடான் 4 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் உட்பட 11 ரன்களை சேர்த்தார். 20 ஓவர் முடிவில் 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.