2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
இதில் ஒரு சில அணிகள் அபாரமாக ஆடினாலும் சில அணிகள் மோசமான ஆடி வருகிறது. அந்த வரிசையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்ற அணிகளை விட மோசமாக விளையாடுவதாக கூறப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளது.

ஆனால் அதில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற போட்டிகளில் தோல்வியையே தழுவியுள்ளது. அதிலும் தோல்வியடைந்த 4 போட்டிகளிலும் 20வது ஓவர் செல்லாமல் 17 வது ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பது போன்ற மோசமான விளையாட்டை விளையாடி வருகிறது. இதனால் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கவலையடைந்துள்ளார்.
முன்னதாக ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியாக 5 வீரர்களை தக்க வைத்தது. அவர்களுக்காக 75 கோடி ரூபாயை சம்பளமாக அளிக்கப்பட்டது. வெறும் 5 வீரர்களுக்கு 75 கோடி செலவழித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: புள்ளி பட்டியலில் சரிந்த பஞ்சாப் கிங்ஸ்... ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி..!

அவருக்கு 18 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அதிரடி பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசனுக்கு 23 கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டது. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மாவுக்கு தலா 14 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. நிதிஷ் குமார் ரெட்டியையும் தக்கவைத்த அந்த அணி அவருக்கு 6 கோடி ரூபாய் அளித்தது.
இந்த ஐந்து வீரர்களுக்கு மட்டுமே 75 கோடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி செலவழித்தது. இவர்களை தொடர்ந்து இஷான் கிஷனை சுமார் 11.25 கோடி ரூபாய்க்கு காவ்யா மாறன் வாங்கினார். இந்த ஆறு வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அணி மோசமாக விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 5 போட்டிகளில் 2 முறை மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 200 ரன்களை எட்டியிருக்கிறது. முதல் போட்டியில் 286 ரன்கள் அடித்து வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஒரு போட்டியில் 17வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. 4 போட்டிகளில் தோல்வியடைந்ததால் புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி இடத்தில் உள்ளது. வெறும் ஆறு வீரர்களுக்கு மட்டும் 86.25 கோடியை செலவிட்ட காவ்யா மாறன் தனது அணியின் செயல்பாட்டால் நொந்துபொய் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிஎஸ்கே அணியா இது.? ஹாட்ரிக் தோல்வி.. சேசிங்கில் சொதப்பல்.. தவிடுபொடியாகும் பழைய சாதனைகள்!