2025 ஐபிஎல் சீசனில் இன்று மதியம் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 239 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இலக்கை எட்ட முடியாமல் தடுமாறியது.

கடைசி ஓவர் வரை போராடி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கான காரணம் குறித்து அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது. நான் டாஸ் போடும்போது இந்த விக்கெட் 40 ஓவர்களும் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதேபோலவே இருந்தது.
இதையும் படிங்க: ஐபிஎல்-லில் அதிவேக 2000 ரன்கள்... சாதனை படைத்த LSG வீரர்... யார் தெரியுமா?

நாங்கள் எங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இது நிச்சயம் சிறந்த ஆட்டம். இறுதியில் நாங்கள் வெறும் நான்கு ரன்களில் தான் தோல்வி அடைந்திருக்கிறோம். 230 ரன்களுக்கும் அதிகமான இலக்கை நோக்கி ஆடும் போது இடையே விக்கெட்டுகள் விழத்தான் செய்யும். பேட்ஸ்மேன்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொண்டார்கள்.

எங்களின் பந்துவீச்சு நடு ஓவர்களில் நன்றாக இருந்தது. சுனில் நரேன் பந்து வீச்சில் மிகவும் திணறினார். எப்போதும் எங்களுக்கு சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி நடு ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவார்கள். ஆனால் இன்று எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சிரமமான நாளாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆரஞ்சு & ஊதா நிற தொப்பி யாரிடம் இருக்கிறது? 20 போட்டிகள் முடித்த நிலையில் ஐபிஎல் 2025 ஒரு பார்வை!!