சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதி, முகமது சிராஜை நீக்கியது பற்றி விவாதங்கள் கிளம்பியுள்ளன. இதற்கு மத்தியில் கடந்த பல மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் வருகை இந்திய அணிக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது ஷமிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் அவர் தனது 12 வருட சர்வதேச வாழ்க்கையில் முதல் முறையாக இந்தப் போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளார்.
ஜனவரி 18 சனிக்கிழமை மும்பையில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தனர். இதே அணி, போட்டிக்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இடம்பெறும். 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் வடிவத்தில் இந்திய அணிக்கு திரும்பும் இந்த அணியில் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர் ஷமியும் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக ஷமி ஒரு வருடத்திற்கும் மேலாக விளையாடாமல் இருந்தார்.
ஒருநாள் தொடருக்கு முன்பு, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஷமி சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவார் என்றாலும், அவரது திறமை ஒருநாள் வடிவத்திலும் ஐசிசி போட்டிகளிலும் காணப்படுவதால் அனைவரின் பார்வையும் சாம்பியன்ஸ் டிராபியின் மீது உள்ளது. அத்தோடு 2013 ஆம் ஆண்டு அறிமுகமான ஷமி, முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கிறார். 2013 ஆம் ஆண்டு போட்டியை வென்ற இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் 2017 ஆம் ஆண்டிலும் அவர் உடற்தகுதி, ஃபார்ம் காரணமாக இடம் பெறவில்லை.
இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. யார் யாருக்கு இடம்?
ஷமியின் வருகை இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. பலத்தை அதிகரிக்கும். காயத்திற்கு முன்பு, ஷமி 2023 உலகக் கோப்பையில் எதிரணிகளுக்கு பெரும் அழிவை கொடுத்தார். வெறும் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகக் கோப்பை வரலாற்றில் வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனையையும் படைத்தார். ஷமியின் வருகை பாகிஸ்தான் - நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். ஏனெனில் ஷமி இந்த இரண்டு அணிகளுக்கும் எதிராக ஒருநாள் போட்டிகளில் சாதனையைப் பெற்றுள்ளார்.
குறிப்பாக நியூசிலாந்திற்கு எதிராக, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமி வெறும் 14 போட்டிகளில் 19.32 சராசரியாக 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதில் உலகக் கோப்பை அரையிறுதியில் 7 விக்கெட்டுகளும் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகளில் 21 சராசரியுடன் 5 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். இப்போது அவர் ஃபிட்டாக இருப்பது மட்டுமல்லாமல், முன்பு போலவே அதே ஃபார்மிலும் இருப்பார் என்று இந்திய அணி நம்புகிறது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி: எதிர்பார்த்த மாதிரியே இந்திய அணி அறிவிப்பு...