2025 ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17வது ஓவர் முடிவதற்குள் வெறும் 116 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை அடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வில் ஜாக்ஸ் 1 சிக்ஸர் அடித்து 17 பந்துகளில் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ரியான் ரிக்கல்டன் நிதனமாக ஆடி 41 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுன்ட்ரிகள் அடித்து விளாசினார். அவருக்கு கூட்டணியாக வந்த சூர்யகுமார் யாதவ் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்து விளாசினார். வெறும் ஒன்பது பந்துகளில் 27 ரன்களை குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இதையும் படிங்க: வான்கடேவில் சுருண்டது KKR... அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்திய MI!!

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சாதனை ஒன்றை செய்துள்ளார். சூர்யகுமார் யாதவ் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆயிரத்து 598 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 3 ஆயிரத்து 698 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தமாக டி20 போட்டிகளில் 288 இன்னிங்ஸ்களில் 8 ஆயிரத்து7 ரன்கள் எடுத்துள்ளார்.

உலக அளவில் இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய டி20 பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரசல். அவர் 4 ஆயிரத்து 749 பந்துகளில் 8 ஆயிரம் டி20 ரன்களை கடந்தார். சூர்யகுமார் யாதவ் தற்போது 5 ஆயிரத்து 256 பந்துகளில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். மேலும் இந்திய அளவில் 8 ஆயிரம் டி20 ரன்கள் எட்டிய 5 வது வீரர் என்ற சாதனையும் அவர் செய்துள்ளார். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அவர் 8 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்!!