கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த பயத்தாலும் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடத்தப்படவில்லை. இப்போது 2025 சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பொறுப்பு பாகிஸ்தானிடம் வந்துள்ளதால், மீண்டும் பயங்கரவாத தாக்குதல் குறித்த பயம் அந்நாட்டை மிரட்டுகிறது.

பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பயங்கரவாத தாக்குதலை நடத்த ஐ.எஸ்.கே.பி குழு முயற்சிக்கும் சாத்தியம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளன.
இதுபோன்ற தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய அமைப்புகளும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளைப் பார்க்க வரும் வெளிநாட்டினரை இஸ்லாமிய அரசு - கோரசன் மாகாணம் பயங்கரவாதிகள் கடத்தி, பணயக் கைதிகளாக்கி மீட்புத் தொகை கேட்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: Flash: பாகிஸ்தானுக்கு எதிராக அபாரம்... 31 வருட சாதனையை முறியடித்து வரலாறு படைத்த விராட் கோலி..!
பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவு, இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணத்திலிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் 2025 ஆம் ஆண்டு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ளும் வெளிநாட்டினரை பிணைப் பணத்திற்காக கடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயங்கரவாதக் குழு குறிப்பாக சீன, அரபு குடிமக்களை குறிவைத்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் இந்த நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் அடிக்கடி பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளைக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
#BREAKING: Intelligence agencies have picked up chatter about a possible attempt at a terror attack on #ChampionsTrophy2025 in Pakistan by ISKP group. Indian agencies have also been briefed about it by foreign counterparts. Chatter picked up about a possible kidnapping or a…
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) February 24, 2025

இஸ்லாமிய அரசு - கோரசன் மாகாணம் என்பது சலாபி ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசின் ஒரு கிளையாகும். இது தென்-மத்திய ஆசியாவில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் செயல்படுகிறது. பயங்கரவாதத் தாக்குதல் குறித்து இதுவரை நம்பகமான ஆதாரமோ அல்லது உறுதிப்படுத்தலோ எதுவும் வரவில்லை. இருப்பினும், தீவிரமான இந்த அச்சுறுத்தலைப் புறக்கணிக்க முடியாது.
இதையும் படிங்க: ‘இந்தியா உங்களை தோற்கடிக்கும்...’ நாக்கில் விஷம் ஏற்றி பாகிஸ்தானை உசுப்பேற்றும் அக்தர்..!