சாம்பியன்ஸ் டிராபி தொடரை காணவரும் வெளிநாட்டவர்களை கடத்தி பெருமளவு தொகையை கைப்பற்றவும் தீவரவாதிகள் திட்டமிட்டருப்பதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 29 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் ஒருபோட்டித் தொடர் நடந்து வருகிறது. பாகிஸ்தானில் நிலவும் தீவிரவாதச்செயல், பாதுகாப்பின்மை, வெடிகுண்டு கலாச்சாரம் ஆகியவற்றால் வெளிநாட்டு அணிகள் இங்கு விளையாடத் தயங்கின. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின்புதான் இங்கு வந்து இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள், நியூசிலாந்து அணிகள் விளையாடத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, சூழல் மாறியுள்ளதை ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கியதைத் தொடர்ந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்தத் தொடரை சீல்குலைக்கும் நோக்கில் இந்தத் தொடரைக் காணவரும் வெளிநாட்டினரைக் கடத்தி பணம் பறிக்க ஐஸ்கேபி தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தீவிரவாதிகள் குறிப்பாக சீன மக்கள், அரபு நாட்டினர் ஆகியோரைக் குறிவைத்துள்ளனர். துறைமுகங்கள், விமானநிலையங்கள், அலுவலகங்கள் என இந்த இரு தேசத்தினரும் அதிகமாக வரும் இடங்களில் இருந்து கடத்தவும் திட்டமிட்டுள்ளனர். பாகிஸ்தான் உளவுத்துறை அளித்த தகவலின்படி, “ ஐஎஸ்கேபி தீவிரவாதிகள் நகர்புறங்களுக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து, கண்காணிப்பு கேமிரா இல்லாத இடத்தை தேர்ந்தெடுத்து, மோட்டார் சைக்கில், ஆட்டோவில் மட்டும் வந்து செல்லக்கூடிய இடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: எளிய இலக்கை போராடி சேஸ் செய்த இந்திய அணி காரணம் என்ன?

இந்த குழுவின் நோக்கம் வெளிநாட்டினரைக் கடத்தி அவர்களை இந்த வீடுகளில் பாதுகாப்பாக அடைத்துவைத்து, பாதுகாப்பு வசதி செய்வது.வெளிநாட்டினரை கடத்தி இந்த வீட்டில் பிணையக் கைதிகளாக வைத்து பணம் பறிப்பதை நோக்கமாக வைத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் பெரிய சர்வதேச நிகழ்வுகளை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த எச்சரிக்கையை உளவுத்துறை விடுத்துள்ளது. வெளிநாட்டினர் மீது பாகிஸ்தானில் பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு சாங்கலாப் பகுதியில் சீன பொறியாளர் மீதும, 2009ம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அது முதல் வெளிநாட்டினருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் உளவுத்துறைஅமைப்பான ஜிடிஐ விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் “ ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை சீர்குலைக்க ஐஎஸ்கேபி தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டு ஐஎஸ்கேபி தொடர்புடைய அமைப்பான அல் அசாமி வெளியிட்ட 19 நிமிட வீடியோவில் கிரிக்கெட் என்பது மேற்கத்திய விளையாட்டு, முஸ்லிம்களின் நலனுக்கு எதிரானது. தேசியவாதத்தை ஆதரிப்போம் பிரசாரம் செய்வோம். கிரிக்கெட் இஸ்லாத்துக்கு விரோதமானது. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவிப்பது முரணாகஇ ருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தவிர 7 நாடுகளின் அணிகளின் வீரர்கள் அந்நாட்டில் உள்ளனர். இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் துபாயில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதல்