ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேரியர் தற்போது முடிந்து விட்டது. நடந்து முடிந்த மெல்போர்ன் டெஸ்டே அவரது கடைசி போட்டியாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வாளர்கள் அவரிடம் ஸ்ட்ரிக்டாக கூறியுள்ளனர்.
ரோஹித் ஏற்கனவே சிட்னி டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார். பேட்ஸ்மேன், கேப்டனாக அவரது மோசமான ஆட்டத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் ரோஹித்துடன் ஒரு சந்திப்பை நடத்தினர். அதன் பிறகே சிட்னி போட்டியை ரோஹித் கைவிட முடிவு செய்துள்ளார்.

இந்திய அணியில் மாற்றத்தின் காலம் தொடங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, ரோஹித் சர்மாவுடன் இந்திய தேர்வுக்குழு கூட்டம் நடத்தி, அவரது டெஸ்ட் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து அனைத்தையும் தெளிவுபடுத்தியுளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு விராட் கோலியுடனும் ஓய்வு குறித்து இந்திய அணி நிர்வாகம் பேச்சு நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருடன் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டு, அணியின் எதிர்காலம், மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: டீம் இந்தியாவில் பெரும் சர்ச்சை: 'மிஸ்டர் ஃபிக்ஸ் இட்...' மீண்டும் கேப்டனாகும் விராட் கோலி..?
அணியின் சீனியர் வீரரான அஷ்வின் ஏற்கனவே தனது ஓய்வை அறிவித்து இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பியுள்ளார். மெல்போர்ன் டெஸ்ட் ரோஹித் சர்மாவின் கடைசி போட்டியாகி விட்டது. தற்போது கோஹ்லியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த மாற்றத்தில் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மிகவும் முக்கியமானவர் என்று தேர்வாளர்கள் கருதுகின்றனர். எனவே, தற்போது அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.ஆகையால் ஜடேஜா அணியில் தொடர்ந்து இருப்பார். வாஷிங்டன் சுந்தர் போன்ற மற்ற வீரர்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்.

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித் சர்மா தோல்வியடைந்தார். அவரால் 5 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியடைந்தார். நியூசிலாந்து, வங்கதேசத்துக்கு எதிராகவும் ரோஹித் ரன் எடுக்கத் தவறினார். கடைசி 8 டெஸ்டில் அவரால் ஒரு அரை சதம் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதையும் படிங்க: ‘போதும் போதும்... உங்க விளையாட்டு...’ இந்திய வீரர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய கவுதம் கம்பீர்..!