2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெற்றியுடன் முதல் போட்டியைத் தொடங்கியுள்ளது. துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி, வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த முக்கியமான வெற்றியின் மிகப்பெரிய ஹீரோ சுபமன் கில்.
இந்தப் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்துவதற்கு அவர் 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்ததே காரணம். ஸ்கோர் போர்டைப் பார்க்கும்போது இந்த வெற்றி எளிதானதாகத் தோன்றலாம். ஆனால், ஒரு கட்டத்தில் இந்திய அணி பெரும் நெருக்கடியில் இருந்தது. போட்டி தடைபட்டது, வெற்றியா? தோல்வியா? என்கிற குழப்பத்திற்கான அறிகுறிகள் இந்திய அணி வீரர்களின் முகத்தில் கவலையாக படர்ந்தன.

பின்னர் களத்தில் இருந்த சுப்பன் கில்லுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது. அதன் பிறகே அவர் துபாயில் ஒரு பாறையைப் போல அசராமல் நின்று ஆடினார். அவர் ஒரு சதம் அடித்தது மட்டுமல்லாமல், இறுதிவரை நிலைத்து நின்று இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சரி, அனுப்பப்பட்ட தகவல் என்ன? அதை யார் அனுப்பினார்கள் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.
இதையும் படிங்க: அற்புதம்..! நரேந்திர மோடி மைதானத்தில் சதம் அடித்து சாதனை: முதல் இந்தியராக சுபமன் கில் அசத்தல்..!
துபாயில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, வெறும் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், மீண்ட பிறகு, அந்த அணி, இந்தியாவுக்கு எதிராக 229 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இதைத் துரத்திய ரோஹித் சர்மாவும், ஷுப்மான் கில்லும் முதல் 10 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்தனர். அதுவரை இந்த இலக்கு எளிதாகத் தெரிந்தது. ஆனால், இந்திய கேப்டன் ரோஹித் அவுட் ஆனவுடன், போட்டி மெதுவாக ஸ்தம்பிக்கத் தொடங்கியது.

மறுபுறம், இந்திய அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. 144 ரன்கள் எடுத்த நிலையில், ரோஹித்தை தவிர, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் பெவிலியன் திரும்பினர். இதனால், இந்திய அணி கடும் நெருக்கடியில் சிக்கியது. இருப்பினும், கில் இன்னும் தில்லாக களத்தில் நின்றார்.
இந்தியா இன்னும் 95 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தபோது, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், கேப்டன் ரோஹிதும், கில்லை இறுதிவரை பேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று மைதானத்திலேயே சமிக்ஞை செய்தனர். கில் அதைப் பின்பற்றி பொறுமையைக் காட்டி களத்தில் தொடர்ந்தார். இதன் மூலம், அவர் 101 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். போட்டிக்குப் பிறகு சுப்மன்கில் இதை போட்டு உடைத்தும் விட்டார்.

சதம் அடித்த சுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதைப் பெறும்போது, அவர் தான் அடித்த சதம் குறித்து, பேசும்போது, ''இதுவரையிலான எனது மிகவும் திருப்திகரமான இன்னிங்ஸ் இது'' எனக் கூறி முத்தாய்ப்பாக முடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: கில், ஸ்ரேயாஸ், அக்ஸர் அபார அரைசதம்! முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி