×
 

மோசமான வரலாற்றை பதிவு செய்த மேக்ஸ்வெல்... ஸ்ரேயாஸ் தான் காரணமா?

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை கிளென் மேக்ஸ்வெல் செய்திருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நேற்று பஞ்சாப் அணியும், குஜராத் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது.  இதை அடுத்து 244 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு 232 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் கிளென் மேக்ஸ்வெல், முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இதன் மூலம் அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை செய்திருக்கிறார். அவர் இதுவரை விளையாடிய ஐபிஎல் தொடர்களில் 19 முறை டக் அவுட் ஆகி உள்ளார். 130 இன்னிங்ஸ்களில் மட்டும் விளையாடி அவர் 19 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளனர். அவர்கள் இருவரும் 18 முறை டக் அவுட் ஆகி உள்ளனர். ஆனால், அவர்கள் 200 இன்னிங்ஸ்களுக்கும் அதிகமாக விளையாடியுள்ளனர்.

இதையும் படிங்க: குஜராத் டைட்டன்ஸ்-ஐ சுறுட்டிய பவுலர்கள்.. 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!!

அவரது இந்த சாதனைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில், அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ரன் சேர்த்து வந்தார். அப்போது 11 வது ஓவரின் போது மேக்ஸ்வெல் களமிறங்கினார்.சாய் கிஷோர் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார். ஆனால் பந்து மேக்ஸ்வெல்லின் காலில் பட்டது. சாய் கிஷோர் அவுட் கேட்டபோது அம்பயர் உடனடியாக எல்பிடபிள்யூ முறையில் அவுட் என அறிவித்து விட்டார்.

அதன் பின் அதை ரிவ்யூ செய்யலாமா? வேண்டாமா? என கிளென் மேக்ஸ்வெல் எதிரில் நின்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயருடன் பேசினார். ஸ்ரேயாஸ் ஐயர் ரிவ்யூ செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கினார். அதை ஏற்று கிளென் மேக்ஸ்வெல் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் ரீப்ளேவில் அது அவுட் இல்லை என்று தெரிய வந்தது. சாய் கிஷோர் வீசிய பந்து ஸ்டம்பில் படவில்லை. அப்போது ரிவ்யூ கேட்டிருந்தால் நிச்சயமாக கிளென் மேக்ஸ்வெல் தப்பி இருப்பார். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயரின் பேச்சைக் கேட்டு ரிவ்யூ செய்யாததால் அவர் ஐபிஎல் வரலாற்றின் படுமோசமான சாதனையை செய்ய நேர்ந்தது.

இதையும் படிங்க: ஐபிஎல் டீமோடு ரிக்கி பாண்டிங் செய்த செயல்... கடுப்பான பாக். ரசிகர்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share