கிங் கோலி எண்ட்ரி....ஓபனிங்கே சும்மா அதிருதே!!
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஐசிசி சாம்ன்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் 12வது ஆட்டத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன். துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
இதனால் முதலில் பேட்டிங் செய்ய தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். ஏற்கெனவே இந்திய அணி அரையிறுதிக்கு சென்றதால் இந்த சம்பிரதாயமாகவே பார்க்கப்படுகிறது. எனினும், தொடக்க வீரராக களமிறங்கிய கில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த விராட் கோலி ரோஹித் சர்மாவுடன் இணை சேர்ந்து விளையாடி வருகிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததுடன், பவுண்ட்ரிக்கு பந்தை எகிறவிட்டு இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். அது போன்று இந்த போட்டியிலும் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நாக் அவுட் சுற்றுகள்.. இப்படியா போட்டி அட்டவணை போடுவாங்க..?
இதேநேரம், ரோஹித் சர்மாவும் சளைத்தவர் இல்லை என்பதற்கு ஏற்ப களத்தில் இறுதிவரை நின்று விளையாட கூடியவர். இரு வரும் ஒன்றாக இணைந்து ஆடுவதால் இந்திய அணியின் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
முன்னதாக இந்த போட்டியில் தசை பிடிப்பு காரணமாக ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என கூறப்பட்டது. ஆனால், அதை பொய்யாகி ரோஹித் விளையாடி வருகிறார். இதேபோல் ஷமி இந்த போட்டியில் விலகுவதாக வதந்திகள் பரவிய நிலையில் அவரும் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட களத்தில் உள்ளார்.
இவர்களை தவிர இந்த போட்டியில் இந்திய அணிக்காக தமிழ்நாட்டு வீரர் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றுள்ளார்.
ஹர்சித் வெளியேற்றப்பட்ட நிலையில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியாக, அக்சர் படேல், ஜடேஜா, குல்ப்தீப் யாதவ், முகமது ஷமி என இந்திய அணியின் அதிரடி வீரர்கள் களம் காண்கின்றனர்.
இதேநேரம் நியூசிலாந்து அணியில் டேரில் மிட்ச்செல் இடம்பெற்றுள்ளார். ஏற்கெனவே அணியில் இருந்த டேவான் கான்வே நீக்கப்பட்டுள்ளார். நியூலாந்து அணியில் மிச்செல் சான் ட்னர், வில் யங்க், டேரில், மேட் ஹென்றி, கைல்ஜேமிசன், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்ஸ், டாம் லாதம், க்ளைன் பிலிப்ஸ், வில் யங்க் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஐசிசி கோப்பை இந்தியாவுக்குதான்.. எல்லா ஏற்பாடும் பண்ணிடாங்க.. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பகிரங்க புகார்!