×
 

இறுதி வரை போராடி தோற்ற RR… 2 ரன்கள் வித்தியாசத்தில் LSG அபார வெற்றி!!

ராஜஸ்தான் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி ராஜஸ்தான் அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்சல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் களமிறங்கினர். மிட்சல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் மார்க்ரம் - பூரன் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தது. ந்தீப் சர்மா வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் பூரன் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் பண்ட் 3 ரன்களில் அவுட் ஆனார். 

இதனால் லக்னோ அணி  தடுமாறியது. அப்போது மார்க்ரம் - ஆயுஷ் பதோனி கூட்டணி இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய மார்க்ரம் 31 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுமுனையில் பதோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி தள்ளினார். மார்க்ரம் 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து வெளியேற, பதோனி சிறப்பாக ஆடி 33 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் மில்லர் - அப்துல் சமத் கூட்டணி இணைந்தது. சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில் 1, 6, 6, 2, 6, 6 என்று 27 ரன்கள் விளாசப்பட்டது.

இதையும் படிங்க: 200-ஐ கடந்த இலக்கு… அபார ஆட்டத்தால் சேஸ் செய்து வெற்றி பெற்ற குஜராத் அணி!!

இதன் காரணமாக லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது. 181 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் 16 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்ட்ரிகள் அடித்து 34 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த நிதிஷ் ரானா 8 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்ட்ரிகள் விளாசி 74 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் வந்த ரியான் பராக் 26 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து ஜூரேல் மற்றும் ஹெட்மயர் கூட்டணி நிதானமாக ஆடி அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்து செல்ல போராடினர். ஆனால் ஹெட்மயர் 12 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த ஷுபம் மற்றும் ஜூரேல் கூட்டணி போராடியும் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. இதனால் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இதையும் படிங்க: சொந்த மண்ணில் வைத்தே RCB-ஐ துவைத்து எடுத்த PBKS... 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share