அடுத்த ஐபிஎல்லில் விளையாட பாகிஸ்தான் நட்சத்திர வீரர் போட்ட பகீர் திட்டம்..! கோலியால் நம்பிக்கை..!
அடுத்த அடுத்த ஆண்டுக்குள், எனக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு கிடைத்தால் ஏன் கூடாது? நான் ஐபிஎல்லில் விளையாடுவேன்
2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடங்கியபோது, பாகிஸ்தான் வீரர்கள் டி20 பிரான்சைஸ் லீக்கில் விளையாட அனுமதிக்கப்பட்டனர். மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஐபிஎல்லில் இருந்து தடை செய்யப்படுவதற்கு முன்பு, ஷோயப் அக்தர், ஷாஹித் அப்ரிடி, சோஹைல் தன்வீர், ஷோயப் மாலிக், கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் போன்ற முன்னணி வீரர்கள் முதல் சீசனில் இடம் பெற்றனர்.
அதன் பிறகு பாகிஸ்தான் அணி வீரர்களை வெவ்வேறு அணி நிர்வாகம் விரும்பியபோதும் அந்நாட்டைச் சேர்ந்த எந்த வீரரும் ஐபிஎல் எந்த சீசனிலும் விளையாடவில்லை. இப்போது, அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாட தான் தகுதியுடையவர் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஷுப்மன் கில்லை அவுட்டாக்கி கொண்டாட்டம்.. மன்னிப்புக்கேட்ட பாகிஸ்தான் வீரர்..!
அமீரின் மனைவி நர்ஜிஸ் ஒரு இங்கிலாந்து குடிமகள். முகமது அமீர் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் அவர். இங்கிலாந்து பாஸ்போர்ட்டைப் பெற நம்பிக்கையுடன் உள்ளார்.
"அடுத்த அடுத்த ஆண்டுக்குள், எனக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு கிடைத்தால் ஏன் கூடாது? நான் ஐபிஎல்லில் விளையாடுவேன்," என்று முகமது அமீர் " ஹார்னா மனா ஹை" அரட்டை நிகழ்ச்சியில் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அகமது ஷெஹ்சாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அமீர் ஒரு பலமாக இருப்பார். அவர்களின் முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்ல உதவ முடியும். ஆர்சிபியின் பந்துவீச்சு பிரச்சனைகளை சரிசெய்ய அமீர் போன்ற ஒரு பந்து வீச்சாளர் தேவை. அவர்களிடம் நல்ல பேட்டிங் யூனிட் உள்ளது. ஆனால் அவர்களின் பிரச்சனை பந்து வீச்சு மட்டும்தான். அமீர் ஆர்சிபிக்காக விளையாடினால், அவர்கள் பட்டத்தை வெல்வார்கள்" என்று அவர் கூறினார்.
இந்தியாவுக்கு எதிராக அமீரின் சில மறக்கமுடியாத சம்பவங்களும் உள்ளன. விராட் கோலி ஒரு காலத்தில் அவருக்கு தனது பேட்டை பரிசளித்தார்.
இதுகுறித்து பேசிய அமீர் "விராட் எனக்கு தனது பேட்டை பரிசளித்தார். அவரது அதிரடியால் நான் மிகவும் வியப்படைந்தேன். நான் எப்போதும் அவரது பேட்டிங்கை மிகவும் ரசிக்கிறேன். அவர் என்னுடைய பந்துவீச்சை பாராட்டினார். நான் அவரது பேட்டில் சில நல்ல இன்னிங்ஸ்களை விளையாடினேன்'' என மகிழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நாக் அவுட் சுற்றுகள்.. இப்படியா போட்டி அட்டவணை போடுவாங்க..?