×
 

டெல்லி அணியில் கே.எல்.ராகுல் இல்லாததற்கு இதுதான் காரணம்... குவியும் வாழ்த்து!!

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல் ஐபிஎல்-லில் முதல் இரு போட்டிகளில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்த காரணம் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் பிரபல நடிகரான சுனில் ஷெட்டியின் மகள் அதியாவை கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கண்டாலாவில் உள்ள சுனியேலின் பண்ணை வீட்டில் நடந்த திருமணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அதியா ஷெட்டி தான் கர்ப்பமாக இருப்பதாகக் கடந்தாண்டு நவம்பரில் அறிவித்தார்.

அந்த போஸ்டில், "எங்கள் அழகான தேவதை விரைவில் வருகிறது. 2025 என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியால் பெருந்தொகைக்கு வாங்கப்பட்ட அவர் சில தனிப்பட்ட காரணங்களால் இவர் முதல் இரு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவரது மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருந்தார்.

இதையும் படிங்க: ஐபிஎல்லில் கேப்டன் பதவியா.? வேண்டவே வேண்டாம் சாமி.. தலைத் தெறிக்கும் கே.எல். ராகுல்!

இந்த நிலையில், குழந்தை பிறப்பு காரணமாகவே ராகுல் முதல் இரு போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போது கே.எல்.ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்துள்ளதை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை பதிவிட்டுள்ளார். அதில், Blessed with a baby girl என்ற வாசகத்துடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில்24-03-2025 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படம் மூலம் ராகுல் - அதியா தம்பதிக்கு நேற்று குழந்தை பிறந்துள்ளது என்பது தெரிய வருகிறது. அதை தாண்டி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இதை அடுத்து அவர் விரைவில் அணியில் இணைவார் என்றும் அதன் பிறகு தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.  

இதையும் படிங்க: ஐபிஎல்லில் கேப்டன் பதவியா.? வேண்டவே வேண்டாம் சாமி.. தலைத் தெறிக்கும் கே.எல். ராகுல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share