×
 

இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய ரிஷப் பந்த்..! ஆஸி, பந்து வீச்சை தெறிக்கவிட்டு சாதனை..!

இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் வரலாற்றில் இது இரண்டாவது அதிவேக அரைசதம். அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையும் ரிஷப் பந்த் நிகழ்த்தினார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் ஆக்ரோஷமான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். அவர் டெஸ்ட் போட்டிகளிலும் பிரகாசித்து வருகிறார். சிட்னி மைதானத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 ன் கடைசி போட்டியிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 

சிட்னி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அதிரடியாக அரைசதம் அடித்தார். இந்த இன்னிங்ஸின் போது நிறைய பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு கடிவாளம் போட்டார்.

சிட்னி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்ய வந்த போது, ​​இந்திய அணி 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் ரிஷப் பந்த் அதிரடியாக பேட்டிங் செய்து அணியின் அழுத்தத்தை குறைத்தார். அதனால், இந்தியாவின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. இந்தப் போட்டியில், பந்த் 33 பந்துகளில் 184.84 ஸ்டிரைக் ரேட்டில் 61 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில், அவரது பேட்டில் இருந்து 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் பறந்தன.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஓய்வா? - மனம் திறந்த ரோகித் சர்மா! 

இந்த இன்னிங்ஸின் போது அவர் தனது அரை சதத்தை வெறும் 29 பந்துகளில் பூர்த்தி செய்தார். ஒரு சிக்ஸருடன் 50 ரன்களைத் தொட்டார்.

இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் வரலாற்றில் இது இரண்டாவது அதிவேக அரைசதம். அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையும் ரிஷப் பந்த் நிகழ்த்தினார். முன்னதாக, ரிஷப் பந்த் 28 பந்துகளில் அரை சதம் அடித்த சாதனையும் படைத்திருந்தார். 2022ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தினார். இது தவிர, டெஸ்ட் கிரிக்கெட்டில் 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் இரண்டு முறை அரை சதம் அடித்த உலகின் மூன்றாவது பேட்ஸ்மேன் இவர் மட்டுமே.

 இதற்கு முன், விவ் ரிச்சர்ட்ஸ், பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தனர். இந்த தொடரில் பந்த் 250 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் ரிஷப் பந்த். சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன் ரிஷப் பந்த் இந்த தொடரில் பெரிய இன்னிங்ஸ் எதையும் ஆட முடியவில்லை. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 255 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இந்த இன்னிங்ஸில் 1 அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். சிட்னி டெஸ்டில் ரிஷப் பந்த் முதல் இன்னிங்சில் 40 ரன்கள் எடுத்திருந்தார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா ஓய்வு... உறுதிப்படுத்திய பிசிசிஐ..! கோலியும் காலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share