×
 

குருமந்திரத்தால் விராட் கோலியை கிரிக்கெட்டில் உயர்த்திய ராம் ரஹீம்..? மகளுடனே படுக்கை... யார் இந்த சல்சா சாமியார்..?

மகள் உறவு உள்ள ஒரு பெண்ணிடம் தகாத உறவு, வைத்துக் கொள்வது ராம் ரஹீமை பின்பற்றும் பக்தர்களையும் மற்றவர்களையும் முட்டாளாக்கும் ஒரு ஏமாற்று வேலை.

தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு சிர்சாவில் உள்ள தேரா தலைமையகத்துக்குத் திரும்பியுள்ளார். ராம் ரஹீம் திரும்புவதற்கு முக்கிய காரணம் முகாம் சிம்மாசனம் தொடர்பாக நிலவி வரும் சர்ச்சையை தீர்த்து வைப்பதே என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது கூறியுள்ள தகவல் அதிர்ச்சி ரகம். 'விராட் கோலி என்னிடம் குருமந்திரம் எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் என்னிடம் இருந்து குருமந்திரம் எடுத்துள்ளனர்'' என கூறி அதிர வைத்துள்ளார்.


தேரா சிர்சாவின் ஆன்லைன் சத்சங்கில் ராம் ரஹீம் பேசுகையில், ''விராட் கோலி 2010ல் இங்கு வந்திருந்தார். அதற்கு முன் 2007-08ல் வந்துள்ளார். பிறகு குருமந்திரத்தையும் எடுத்துக் கொண்டார். இதுபோன்ற என்னிடம் குரு மந்திரம்  எடுத்துக் கொண்ட பல கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். ஒருமுறை இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இங்கு நடந்தது. அப்போது பாகிஸ்தான் வீரர்களும் என்னிடமிருந்து குருமந்திரத்தை எடுத்துக் கொண்டனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பும் ராம் ரஹீம் இதுபோன்ற விசித்திரமான கதைகளை அளந்து விட்டுள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பு கூட, விராட் கோலி, ஜாகீர் கான், ஷிகர் தவான் மற்றும் யூசுப் பதான் போன்ற வீரர்கள் தன்னிடம் கற்றுக் கொள்ள வருவார்கள் என்று ராம் ரஹீம் கூறியிருந்தார். வீரர்களின் பயிற்சி வீடியோக்கள் என்னிடம் உள்ளன. அந்த வீரர்கள் என் பெயரை சொல்லலாம்... அல்லது சொல்லாமல் கூட இருக்கலாம். அது அவர்களின் விருப்பம். ஆனால் நான் அவர்களுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்தேன்'' என்கிறார்.

இதையும் படிங்க: புனேயில் இன்று 4வது டி20 போட்டி: இந்திய அணியில் இரு மாற்றத்தால் டி20 தொடரை வெல்லுமா?


சாதுவும், பத்திரிகையாளருமான சத்ரபதி கொலை வழக்கில் ராம் ரஹீம் ரோஹ்டக்கின் சுனாரியா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். ஜனவரி 28ம் தேதி 30 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். ஆனால், இம்முறை சிர்சா முகாமுக்குச் செல்ல அரசு அனுமதியும் வழங்கியது. எங்கிருந்து பக்தர்களுக்கு இணையத்தில் உபதேசம் செய்து வருகிறார். இந்தப் பிரசங்கத்தில் அவர் விராட் கோலி குறித்து தெரிவித்துள்ளார்.

ராம் ரஹீம் தனது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத்திடம் முகாமின் கட்டளையை ஒப்படைக்க முடியும். முகாமின் நிர்வாகம் மற்றும் நிதி விவகாரங்கள் உட்பட அனைத்து உரிமைகளும் ஹனிப்ரீத்துக்கு வழங்கப்படலாம். இதற்காக அவர்களுக்கு பவர் ஆஃப் அட்டர்னியும் கொடுக்கலாம். இருப்பினும் இந்த செய்தியை முகாம் நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

 

யார் இந்த ஹனிப்ரீத்..?

தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத். ஆனால் இவரது முன்னாள் கணவர் விஸ்வாஸ் குப்தா, ராம் ரஹீமுக்கும் ஹனிபிரீத்துக்கும் இடையே முறைகேடான உறவு இருப்பதாக குற்றம் சாட்டி வந்தார். மகள் உறவு உள்ள ஒரு பெண்ணிடம் தகாத உறவு, வைத்துக் கொள்வது ராம் ரஹீமை பின்பற்றும் பக்தர்களையும் மற்றவர்களையும் முட்டாளாக்கும் ஒரு ஏமாற்று வேலை. எந்த தந்தை தன் மகளை படுக்கையில் படுக்க வைக்கிறார்? அவள் எப்போதும் அவனுடன் தான் இருப்பாள்.

அவள் என்னுடன் தூங்கவில்லை. ஒவ்வொரு இரவும், அவள் அவனுடன் (ராம் ரஹீம்) இருந்தாள். ராம் ரஹீம் என்னைக் கைதியாக்கிவிட்டார்,  என்  மனைவி ஹனிப்ரீத்தை என்னிடம் வர அனுமதிக்கவில்லை" என்று குப்தா குற்றச்சட்டுகளை அடுக்கினார். 

ஹரியானாவில் உள்ள சிர்சா நகருக்கு அருகில் உள்ள பரந்த வளாகத்தில் உள்ள தேரா தலைவர் ராம் ரஹீமின் 'குஃபா' அமைந்துள்ளது. அங்கு இருவரும் ஒரே படுக்கை அறையில் இருந்ததை பார்த்ததாக அதிர்ச்சி அளித்தார் குப்தா. 

"நான் பார்த்ததைப் பற்றி ஏதாவது சொன்னால் என்னையும் என் குடும்பத்தினரையும் வெளியேற்றிவிடுவேன் என்று பாபா மிரட்டினார். என் வாழ்க்கை பாழாகிவிட்டது' என்று குப்தா கூறி இருந்தார். 

இரண்டு பெண் சீடர்களை பலாத்காரம் செய்ததற்காக பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்.அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, ரோஹ்தக் அருகே உள்ள சுனாரியாவில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.ஹரியானா காவல்துறை ஹனிப்ரீத் மீது வன்முறையைத் தூண்டுதல், தேசத் துரோகம், ராம் ரஹீம் தப்பிக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஹனிப்ரீத் 2007 ஆம் ஆண்டு முதல் ராம் ரஹீமின் நெருங்கிய உதவியாளராக இருந்து வருகிறார்.

 ராம் ரஹீம் இயக்கி, தயாரித்து, நடித்த ஐந்து படங்களில் ஹனிப்ரீத் நாயகியாகவும் நடித்துள்ளார். மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உட்பட ராம் ரஹீமின் குடும்பத்தை விட ஹனிப்ரீத்துக்கு செல்வாக்கு அதிகம். அதனால்தான் இப்போது பரோலில் வெளி வந்துள்ளாம் ரஹீம் தனது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத்திடம் ஆசிரம பொறுப்புகளை ஒப்படைக்க முடிவெடுத்துள்ளார். 

இதையும் படிங்க: கோலி என்ன கிரிக்கெட்டின் தேவதூதரா..? சொதப்பல் மன்னன்… போலி பில்ட் அப்களின் அண்ணன்..! தாறுமாறு விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share