2025 ஐபிஎல் சீசனில் இன்றைய இரவு ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக பிரியான்ஸ் ஆர்யாவும் பிராப்சிம்ரன் சிங்கும் களமிறங்கினர். பிரியான்ஸ் ஆர்யா, 4 சிக்ஸர்கள் 2 பவுண்டரி அடித்து 13 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதேபோன்று பிராப்சிம்ரன் 23 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், 6 பவுண்டரி, 6 சிக்ஸர் அடித்து 36 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அவுட் ஆகி வெளியேறினார். நெஹல் வதேரா 27 ரன்களிலும், ஷாசாங் 2 ரன்களிலும் மேக்ஸ்வெல் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஸ்டோனிஸ் 11 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்ட்ரிகள் மற்றும் 1 சிக்ஸ் அடங்கும். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 246 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அணி, வேகமாக ஸ்கோரை உயர்த்தியது.
இதையும் படிங்க: 4வது வெற்றியை பதிவு செய்த LSG... சாய் சுதர்சனிடம் இருந்து ஆரஞ்ச் தொப்பியை மீட்ட பூரான்!!

தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 3 சிக்ஸர்கள் 9 பவுண்ட்ரிகள் அடித்து 37 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 14 பந்துகளில் 21 ரன்கள் குவித்தார். மறுபுறம் அபிஷேக் ஷர்மா பஞ்சாப் அனியின் பந்துகளை பறக்கவிட்டார்.

இவரது ஆட்டத்தை பார்த்து பஞ்சாப் அணி பவுலர்கள் மிரண்டுபோயினர். 55 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 14 பவுண்ட்ரிகள் அடித்து 141 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய இசான் கிசான் 6 பந்துகளில் 9 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: பிளே ஆப்க்கு தகுதி பெறுமா CSK... அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹஸி சொல்வது என்ன?