2025 சாம்பியன்ஸ் டிராபியின் மிகப்பெரிய போட்டியான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23 அன்று நடைபெறும். இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டிக்காக ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் காத்திருக்கிறார்கள். இது கிரிக்கெட்டில் மிகப்பெரிய போட்டியாகக் கருதப்படுகிறது. இரு அணிகளும் ஐசிசி போட்டிகளிலும், ஆசியக் கோப்பையிலும் மட்டுமே மோதுகின்றன. இரு அணிகளின் வீரர்களுக்கும் அதிக அழுத்தம் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்கு முன்பு, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி முன்னிலை வகித்தாலும், விராட் கோலி பாகிஸ்தான் அணியை லேசாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய விராட் கோலி, ''பாகிஸ்தான் ஒரு வலுவான அணி. இந்த முறை எனக்கு காயம் பிரச்சனை எதுவும் இல்லை. அனைத்து வீரர்களும் உடல் தகுதியுடன் உள்ளனர். பாகிஸ்தான் அணியும் சிறப்பாக இருக்கிறது. அவர்கள் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சொந்த மண்ணிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கடைசி போட்டி 2024 டி20 உலகக் கோப்பையில் மோதியது. அந்தப்போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே மிகவும் கடுமையான போட்டி நிலவியது. அந்தப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஒருநாள் போட்டியில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் போது நடந்தது. அப்போது இந்திய அணி, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆனால் சமீப காலமாக, வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களால் பாகிஸ்தான் அணி சிக்கல்களை எதிர்கொண்டது. ஆனால் இந்த முறை அந்த அணியின் அனைத்து முன்னணி வீரர்களும் களத்தில் இறங்க உடல் தகுதியுடன் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ரோஹித் எடுத்த இதயத்தை உடைக்கும் முடிவு... விராட் கோலிக்காக கழற்றிவிடப்பட்ட வீரர்..!

சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை, இதுவரை இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் நடந்துள்ளன. இதில், பாகிஸ்தான் மூன்று முறையும், இந்தியா இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் இங்கு ஆதிக்கம் செலுத்துவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், சாம்பியன்ஸ் டிராபியில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி 2017 நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் அணி, இந்தியாவை தோற்கடித்து போட்டி பட்டத்தை வென்றது.
இதையும் படிங்க: நள்ளிரவில் போன் போட்ட ரோஹித்.. அணிக்கு வெளியே சென்ற கோலி... உண்மையை உடைத்த ஸ்ரேயாஸ் ஐயர்..!