×
 

சென்னை இளைஞருக்கு அமெரிக்க அரசில் முக்கியப்பதவி... இந்தியர்கள் மீது டிரம்ப் அசாத்திய நம்பிக்கை..!

37 வயதான அவர் கடந்த காலத்தில் மைக்ரோசாப்ட், யாகூ, ஸ்னாப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் பணியாற்றியவர்.

நம் காலத்தின் மூன்று பெரிய சமூக தளங்களில் சீனியர் தயாரிப்பு பதவிகளில் பணியாற்றிய உலகின் ஒரே நபர் நம் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன். 37 வயதான அவர் கடந்த காலத்தில் மைக்ரோசாப்ட், யாகூ, ஸ்னாப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் பணியாற்றியவர். 

அவருக்குத் தான் இப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அரசில் மிகப்பெரிய பொறுப்பை வழங்கி கவுரவப்படுத்தி இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், எழுத்தாளர் ஸ்ரீராம் கிருஷ்ணனை செயற்கை நுண்ணறிவு, கிரிப்டோ கரன்சியில் வெள்ளை மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார்.

"ஸ்ரீராம் கிருஷ்ணன் வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றுவார்" என்று டிரம்ப்  அறிவித்தார்.

‘‘டேவிட் சாக்ஸுடன் நெருக்கமாகப் பணிபுரியும் ஏஐ-ல் தொடர்ந்து அமெரிக்கத் தலைமையை உறுதிசெய்து, நமது நாட்டிற்குச் சேவை செய்ய முடிந்ததில் நான் பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பிற்கு டொனால்ட் டிரம்பிற்கு நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீராம் கிருஷ்ணன்.

முன்பு மைக்ரோசாப்ட், ட்விட்டர், யாகூ, பேஸ்புக், ஸ்னாப் ஆகியவற்றில் தயாரிப்புக் குழுக்களுக்கு தலைமை தாங்கிய ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகையின் ஏஐ மற்றும் கிரிப்டோகரன்சி தலைமை ஆலோசகராக பணியாற்றுவார்.

“டேவிட் சாக்ஸுடன் பணிபுரியும் ஸ்ரீராம், ஏஐ-ல் அமெரிக்கத் தலைமையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துவார்.  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உட்பட, ஏஐ கொள்கையை அரசுக்கு முழுவதும் வடிவமைத்து ஒருங்கிணைக்க உதவுவார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் விண்டோஸ் அஸூரின் நிறுவன உறுப்பினராக ஸ்ரீராம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன், "எங்கள் நாட்டிற்குச் சேவை செய்ய முடிந்ததற்கும், டேவிட் சாக்ஸுடன் நெருக்கமாகப் பணியாற்றும் ஏஐ-ல் அமெரிக்கத் தலைமையைத் தொடர்ந்து கொண்டிருப்பதற்கும் நான் பெருமைப்படுகிறேன்" என்றும் டிரம்ப் புகழ்ந்துள்ளார்.

ஸ்ரீராம் ராமகிருஷ்ணன் மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி தனது சொந்த நிறுவனங்களைத் தொடங்குவதற்கு முன்பு ஃபேஸ்புக் மற்றும் நெட்பிளிக்ஸில் பணிபுரிந்தவர். அவர்கள் "தொழில்நுட்ப சக்தி ஜோடி" என்று தொழில்நுட்ப உலகில் கொண்டாடப்படுகின்றனர்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். "மிகவும் பாரம்பரியமான" நடுத்தர வருமான குடும்பத்தைச் சேர்ந்தவர். 1990 களின் பிற்பகுதியில் ஒரு கம்ப்யூட்டர் ஒரு ஆடம்பரமான பொருள். அதை வாங்குவதற்கு தனது தந்தையை சமாதானப்படுத்தி பெரும் முயற்சி செய்தார். அந்தக் கம்ப்யூட்டர்தான் அவரது வாழ்க்கையை மாற்றியது.

இதற்காக அபோதே 60,000-70,000 ரூபாய் செலவாகி உள்ளது. தன் தந்தையின் பல ஆண்டு ஊதியம் அந்தப்பணம். நான் அதை என் படிப்புக்கு பயன்படுத்துவேன் என்று சொல்லித்தான் அப்பாவிடம் கேட்டேன். ஆனால் அப்பாவுக்கு இன்னும் இணையத்தை பயன்படுத்தத் தெரியாது. எனவே அவர் தனக்குத் தானே அடிப்படைகளைக் கற்பிப்பதற்கான புத்தகங்களை வாங்குவார்’’ என்கிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன்.  

ஸ்ரீராம் கிருஷ்ணன் 2002 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் போது திருமதி ஆர்த்தி ராமமூர்த்தியை ஆன்லைனில் சந்தித்திருக்கிறார். அப்போது சாப்ட்வேர் இன்ஜினியராகும் நோக்கில் அவர் ஏற்கனவே சென்று கொண்டிருந்தார். அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ராமமூர்த்தியும் அப்படித்தான்.

இருவரும் ஒரு வருடம் யாஹூ மெசேஞ்சரில் தொடர்ந்து ஷேட்டிங்கில் இருந்துள்ளனர். ஒரே கல்லூரியில் படித்தாலும் இருவரும் ஓராண்டுகளுக்கு பிறகே நேரில் சந்தித்து தங்களது காதலை வெளிப்படுத்தி உள்ளனர்.
 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share