10 ஆயிரத்திற்கு கீழ் உள்ள சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள்.. முழு லிஸ்ட் இதோ.!!
பலர் ₹20,000 க்கு மேல் பட்ஜெட் அவசியம் என்று கருதினாலும், பல சிறந்த பிராண்டுகள் ₹10,000 க்கு கீழ் உயர்தர 5G ஸ்மார்ட்போன்களை வழங்குகின்றன. ரூ. 10 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
விவோ டி3 லைட்
விவோ டி3 லைட் 6.56-இன்ச் HD LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 சிப்செட் மற்றும் MediaTek G57 MC2 GPU மூலம் இயக்கப்படுகிறது. 6GB RAM மற்றும் 128GB சேமிப்பகத்துடன், இது தடையற்ற மல்டி டாஸ்கிங்கை உறுதி செய்கிறது. கேமரா அமைப்பில் 2MP ஆழ சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமரா ஆகியவை அடங்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் IP64 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடு போன்ற கூடுதல் அம்சங்கள் அதன் பாசிட்டிவ் அம்சங்களாக உள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 50
இன்பினிக்ஸ் ஹாட் 50 ஆனது 6.7-இன்ச் HD LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது MediaTek Dimensity 6300 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது Mali G57 MC2 GPU உடன் கூடுதலாக உள்ளது. 8GB RAM மற்றும் 128GB சேமிப்பகத்துடன், இது அன்றாட பணிகளை சிரமமின்றி கையாளுகிறது. கேமரா பொறுத்தவரை 48MP Sony முதன்மை சென்சார், இரட்டை LED ஃபிளாஷ் கொண்ட சென்சார் மற்றும் செல்ஃபிக்களுக்கான 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை கொண்டுள்ளது. இதன் அம்சங்கள் பட்ஜெட்டில் செயல்திறனைத் தேடும் பயனர்களுக்கு மல்டி டாஸ்கிங் மற்றும் ஸ்டைலான விருப்பமாக அமைகிறது.
இதையும் படிங்க: ரூ.49 ரீசார்ஜ் திட்டத்துக்கு இவ்வளவு வசதிகளா.! ஜியோவின் மலிவு விலை பிளான்..!
போக்கோ சி75
போக்கோவின் C75 ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 5160mAh பேட்டரியுடன் தனித்து நிற்கிறது என்றே கூறலாம். நீண்ட பயன்பாட்டிற்கு 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த சாதனம் 6.88-இன்ச் HD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ARM Mali G52 GPU உடன் MediaTek Helio G81 Ultra செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8GB RAM மற்றும் ஈர்க்கக்கூடிய 256GB சேமிப்பு திறன் உள்ளது. கேமரா முன்புறத்தில், 50MP முதன்மை சென்சார், இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 13MP முன் கேமரா ஆகியவை சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ திறன்களை வழங்குகின்றன.
மோட்டோ ஜி35
மோட்டோ ஜி35 ஒரு தனித்துவமான மொபைல் ஆகும். இது 6.72-இன்ச் HD LCD டிஸ்ப்ளேவை வழங்குகிறது. இது யுனெஸ்கோ T760 செயலி மற்றும் மாலி G57 MC4 GPU இல் இயங்குகிறது. இது கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங்க்கு சிறந்த மொபைல் ஆகும். 4GB ரேம் மற்றும் 128GB சேமிப்பகத்துடன், இது பயன்பாடுகள் மற்றும் மீடியாவிற்கு போதுமான இடத்தை வழங்குகிறது. 5000mAh பேட்டரி 18W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
இதன் இரட்டை கேமரா அமைப்பில் 50MP முதன்மை சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் 16MP முன் கேமரா செல்ஃபிக்களுக்கு ஏற்றது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மோஸ் ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் IP52 மதிப்பீடு போன்ற கூடுதல் அம்சங்கள் இதை ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக ஆக்குகின்றன.
இதையும் படிங்க: கிட்ஸ் டூ பெரியவர்கள் தெரிஞ்சுக்கோங்க..மொபைலில் உள்ள வித்தியாசமான 7 வசதிகள்..