×
 

ரூ.8 ஆயிரம் தள்ளுபடியில் விற்கும் சாம்சங்கின் டாப் 10 மொபைல்.. உடனே முந்துங்க!!

இந்த 5G ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் மூன்று கேமரா உள்ளது. இது 50MP பிரதான OIS கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OneUI 6 இல் இயங்குகிறது.

சாம்சங் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டின் மிகவும் விற்பனையான ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) ஆகும். தற்போது இந்த மொபைல் குறைந்த விலையில் கிடைக்கிறது. சமீபத்திய அறிக்கையின்படி, இந்த சாம்சங் மொபைல் உலகளவில் அதிகம் விற்பனையான 10 சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 

கடந்த ஆண்டு வெளியான இந்த மொபைல் தற்போது பிளிப்கார்ட் (Flipkart) இல் ரூ.8,000 தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன்மீது கூடுதலாக சாம்சங் நிறுவனமும் பல்வேறு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் வழங்குகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ14 இன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் Flipkart இல் தற்போது ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ரூ.20,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய விலைக்குறைப்பு காரணமாக ரூ. 8,000 தள்ளுபடி பெற முடிகிறது. மேலும் Flipkart 5% கூடுதல் தள்ளுபடியையும் வழங்குகிறது. இதைத் தவிர, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் பழைய மொபைலை மாற்றி கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். 

இதையும் படிங்க: 50MP கேமரா.. நீடித்து உழைக்கும் பேட்டரி.. தரமான சம்பவம் செய்யும் சாம்சங்! விலையும் ரொம்ப கம்மி!

இந்த மொபைல் டார்க் ரெட், லைட் கிரீன் மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதில் வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஆக்டா-கோர் பிராசசர் இந்த மொபைல் போனை இயக்குகிறது. 

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. கூடுதலாக, microSD கார்டு மூலம் ஸ்டோரேஜை அதிகரிக்கலாம். 5,000mAh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், USB Type-C சார்ஜிங் வசதி உள்ளது.

இந்த 5G ஸ்மார்ட்போனில் பின்புறம் மூன்று கேமராக்கள் கொண்ட செட்அப் உள்ளது. இதில் 50MP OIS பிரதான கேமரா, 2MP மேக்ரோ சென்சார், 2MP டெப்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்கிற்காக 13MP முன்புற கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android 14 அடிப்படையிலான OneUI 6 இயக்குதளத்தில் செயல்படுகிறது.

இதையும் படிங்க: மாதம் ரூ.2,654 தான்..! சாம்சங் S23 Ultra வாங்க சரியான டைம் இதுதான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share