எட்ஜ் 60 ஃபியூஷனுக்கு தேதி குறித்த மோட்டோரோலா - இந்தியாவில் எப்போது கிடைக்கும்?
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹலோ UI உடன் வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எட்ஜ் 60 தொடரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வரிசையில் எட்ஜ் 60, எட்ஜ் 60 ப்ரோ மற்றும் எட்ஜ் 60 ஃபியூஷன் ஆகிய மூன்று மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ டீஸர்கள் ஏற்கனவே எட்ஜ் 60 வேரியண்டை மூன்று வண்ண விருப்பங்களில் காட்சிப்படுத்தியுள்ளன. இதற்கிடையில், புதிய வடிவமைப்பு ரெண்டர்கள் வெளிவந்துள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் நான்கு தனித்துவமான வண்ணங்களில் வரும் என்று வதந்தி வெளியாகி உள்ளது.
அவை நீலம், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா ஆகும். வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் ஒரு LED ஃபிளாஷ் கொண்ட பின்புற கேமரா இருக்கும். அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எட்ஜ் 60 ஃப்யூஷன் பிளிப்கார்ட் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கும் என்பதை மோட்டோரோலா உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெற்றோர்கள் கவனத்திற்கு.. குழந்தைகளை ஸ்மார்ட்போன்களிலிருந்து தள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த மொபைல் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஈர்க்கக்கூடிய IP68 மற்றும் IP69 மதிப்பீட்டையும், இராணுவ தர MIL-810H ஆயுள் சான்றிதழையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹலோ UI உடன் கிடைக்கும்.
இது மூன்று ஆண்டுகள் OS மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்களை உறுதி செய்கிறது. இந்த மொபைலில் 4,500 நிட்ஸ் உச்ச பிரகாசம், HDR10+ ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் 6.7-இன்ச் 1.5K வளைந்த காட்சி இடம்பெறும்.
மீடியாடெக் டைமன்சிட்டி 7400 செயலி, 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. மோட்டோ AI தொகுப்பு மற்றும் கூகிளின் சர்க்கிள் டு சர்ச் வசதியும் இதில் கிடைக்கும்.
புகைப்படம் எடுப்பதற்கு, மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 50MP சோனி LYT700C முதன்மை சென்சார், 13MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் ஒரு மேக்ரோ கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்புறத்தில் 4K வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்ட 32MP சென்சார் இருக்கும். 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,500mAh பேட்டரி நீண்ட கால செயல்திறனை உறுதி செய்யும்.
இதையும் படிங்க: சிமெண்டும் இல்லை... செங்கலும் இல்லை... ஆச்சர்யப்படுத்தும் உலகின் முதல் புதிய வீடு: 1000 ஆண்டுகள் வலிமை