கிப்லி ஸ்டைல் போர்ட்ரெய்ட்ஸ்.. இலவசமாக எடுப்பது எப்படி தெரியுமா?
கிப்லி ஸ்டைல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த கிப்லி ஸ்டைல் போட்டோக்களை இலவசமாக மாற்றுவது எப்படி? என்று பார்க்கலாம்.
கிப்லி ஸ்டைல் ஆர்ட் இணையம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்கள் மற்றும் போஸ்ட்களில் இதே போன்ற புகைப்படங்களைக் காணலாம்.
ஆனால் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? என்பது உங்களுக்கு தெரியுமா? ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இணையத்தில் பல ட்ரெண்ட்களை மாற்றி வருகிறது. கிப்லி ஸ்டைல் ஆர்ட் ஆனது கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவை புரட்டிப்போட்டு வருகிறது.
பலர் தங்கள் சொந்த கிப்லி-பாணி படங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. அதை இலவசமாகச் செய்யலாம். ChatGPT மற்றும் Grok AI போன்ற AI மாதிரிகள் பயனர்கள் கிப்லி-பாணி படங்களை சிரமமின்றி உருவாக்குகிறது.
இதையும் படிங்க: 90 நாட்கள்.. 100 ரூபாய்க்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுக்கும் ஜியோ!
ChatGPT ஐப் பயன்படுத்தி Ghibli-பாணியிலான போட்டோக்களை உருவாக்க, ChatGPT 4o மூலம் செய்து முடிக்கலாம். இதற்கு உங்களுக்கு பிரீமியம் அக்கவுண்ட் இருக்க வேண்டும். இல்லையென்றால் கவலைப்பட தேவையில்லை.
எலான் மஸ்க்கின் குழுவால் உருவாக்கப்பட்ட Grok AI, பயனர்கள் Ghibli-பாணி கலைப்படைப்பை உருவாக்க உதவுகிறது. அதுவும் இலவசமாக. இதன் மூலம் நீங்களும் ட்ரெண்டுக்கேற்ற மாதிரி Ghibli புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து அசத்துங்கள்.
இதையும் படிங்க: கூகுளில் இதை மட்டும் தேடாதீங்க.? இல்லைனா ஜெயிலுக்கு தான் போகணும்!