மன்மதன், வல்லவன் என பல அவதாரங்களை எடுத்த சிலம்பரசன் என்றும் மக்கள் மனதில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் உள்ள இவர், சரியாக ஷூட்டிங்கிற்கு வரமாட்டார் என்ற பேச்சுக்களும் இருந்து வந்தது. சில காலங்களில் தனக்கு படவாய்ப்பு எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த சிம்புவின் உடல் எடை கூடியது அவருடைய வருத்தத்தை வெளிப்படுத்தியது .

இதனை தொடர்ந்து, ஒரு காலத்தில் பாட்டு சர்ச்சையில் சிக்கியவர் யார் என கேட்டால், எல்லோருக்கும் நினைவில் வருவது நடிகர் சிலம்பரசன் தான்.. அப்பொழுது அவர் பாடிய "பீப் பாடல்" பெரிய அளவில் தமிழகத்தில் கொதிப்பை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு நெகட்டிவ் கமென்ஸ்களை வாரி குவித்தவர்.
இதையும் படிங்க: வந்தான், சுட்டான், செத்தான், ரிப்பீட்டு.. மீண்டும் ரிலீஸ் ஆகிறது 'மாநாடு'

பின், நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்து இளைஞர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தார். பின் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது உடல் எடையை குறைத்து, மாநாடு படத்தில் மாஸ் காமித்தார். அதன் பின் பல படங்களை நடித்தாலும் தற்பொழுது டிராகன் இயக்குனர் அஸ்விந் மாரிமுத்து இயக்கத்தில் கண்டிப்பாக படம் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் சிம்புவை வலியுறுத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் வேளையில், விஜய்க்கு அடுத்தது சிம்புதான் என்ற பெயர் பரவ ஆரம்பித்து உள்ளது. காரணம் இந்த வருடம் சிம்புவின் நான்கு படங்கள் வெளியாக உள்ளது என்ற செய்தி தான். இந்த நிலையில், 38 வருடங்களுக்குப் பின் கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் இணைந்திருக்கும் தக் லைஃப் படத்தில் சிம்பு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இரண்டாவதாக, பார்க்கிங் இயக்கிய இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவின் 49வது படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கிறார் சிம்பு. இந்த படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மூன்றாவதாக,சிம்பு நடிக்கப் போகும் அவருடைய ஐம்பதாவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நான்காவது, பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கி தற்பொழுது ரசிகர்களின் அன்பை பெற்றுள்ள இயக்குனர்அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 51 வது படத்தை இயக்குகிறார்.

இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் அடுத்த இரண்டு ஆண்டுக்கு தமிழ் சினிமாவில் கிங் STR தான் என கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: என்ன சிம்பு சார் மனசுலாயோ... ஃபர்ஸ்ட் இவர் படத்துல தான் நடிக்கனும்.. ரசிகர்கள் போட்ட கண்டிஷன்..!