மிகப் பிரபலமான தமிழ் மற்றும் கன்னட நடிகையான ரன்யா ராவ் கிலோ கணக்கில் தங்கம் கடத்தி பெங்களூரு ஏர்போர்ட்டில் போலீசாரிடம் வசமாக சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அதிர்ச்சியூட்டும் வகையில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு 14.8 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததை அடுத்து, அதை கொண்டு வந்த கன்னட நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) கைது செய்தது.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்த நடிகை ரன்யா ராவ், அடிக்கடி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்ததால் கண்காணிப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தினுசு தினுசாய் யோசிக்கிறாங்கப்பா.. ஏர்போர்ட்டில் சிக்கிய 1.39 கிலோ தங்கம்.. கடத்தல்காரரை மடக்கி பிடித்த அதிகாரிகள்..!
கர்நாடகாவில் பணியாற்றும் ஒரு மிகப் பிரபலமான உயர் பொறுப்பில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினரான ரன்யா ராவ், தனது ஆடையில் தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெங்களூரு விமான நிலையம் வந்தவுடன், அவர் காவல்துறை இயக்குநர் ஜெனரலின் (டிஜிபி) மகள் என்று பொய்யாகக் கூறி, உள்ளூர் காவல்துறையினரை அழைத்து பேசியதால் அவர் மீது சந்தேகம் வலுப்பெற்றது என ஆரம்ப கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரன்யா ராவ் போலீசாரிடம் தெரிவித்த அதிகாரிகள் அல்லது அவரது ஐபிஎஸ் உறவினருக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா அல்லது தெரியாமல் அவருக்கு உதவி செய்தார்களா என்று டிஆர்ஐ இப்போது விசாரித்து வருகிறது.

15 நாட்களுக்குள் நான்கு முறை துபாய்க்கு ரன்யா பறந்து சென்றதைக் கவனித்த பின்னர், புலனாய்வாளர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெங்களூருவின் HBR லேஅவுட்டில் உள்ள DRI தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்றரை கிலோ தங்கத்தை கடத்தி சிக்கிய நடிகை ரன்யா தனி நபராக செயல்படுகிறாரா? அல்லது ஒரு பெரிய கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாக இருந்தாரா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், DRI தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடபடவில்லை.

தங்கக் கடத்தலில் சிக்கிய ரன்யா ராவ், சுதீப் கிச்சா உடன் மாணிக்யா (2014) படத்தில் அறிமுகமானார். பின்னர் வாகா (2016) மற்றும் படகி (2017) போன்ற தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தார் .
சிக்மகளூரை பூர்வீகமாகக் கொண்டவரும், தயானந்த சாகர் கல்லூரியில் பொறியியல் பட்டதாரியுமான இவர், படங்களில் நுழைவதற்கு முன்பு கிஷோர் நமித் கபூர் நடிப்பு நிறுவனத்தில் பயிற்சி பெற்றார்.
கர்நாடகத்தில் மிகப் பிரபலமான நடிகையான ரம்யா ராவ் தங்கம் கடத்தி போலீசில் சிக்கி கைதானது கர்நாடக திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: 100 பெண்களுடன் 'டேட்டிங்'..! ரூ.3 கோடி சுருட்டிய 'காதல் மன்னன்' கைது..!