நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு அடுத்தப்படியாக கார் ரேஸ் மீதும் அளவற்ற ஆர்வம் கொண்டவர். இதனால் ‛அஜித்குமார் ரேஸிங்' என்ற நிறுவனத்தை தொடங்கிய அவர், பாயில் நடந்து வரும் '24எச்' ரேஸிலும் தனது அணியை பங்கேற்கவைத்தார்.
கடந்த ஜனவரி 12ம் தேதி நடைபெற்ற போர்ஷ்சே 991 கப் கார் ரேஸில், அஜித் அணி 3வது இடம் பிடித்து அசத்தியது. இதற்காக ஜிடி4 பிரிவில் ‛ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்' எனும் விருதும் வழங்கப்பட்டது.

அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண, ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர். போட்டியை நடத்துபவர்கள் அஜித் குமாருக்காகக் குவிந்துள்ள ரசிகர்களைக் கண்டு வியந்துள்ளனர். கார் பந்தயத்துக்கு இடையில் பேட்டியளித்த அஜித் ,‘‘உண்மையில், இவ்வளவு ரசிகர்கள் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களை நான் அளவுகடந்து நேசிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: கேட்டாரே ஒரு கேள்வி...? அஜித் வாழ்க! விஜய் வாழ்க!.. எப்போ நீங்க வாழப் போறீங்க?
தனது ரசிகர்களின் வருகையில் நெகிழ்ந்து போயிருந்த அஜித்குமார் இன்று அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “கார் ரேஸில் வெற்றி பெற உழைத்த எனது அணிக்கு நன்றி; ரசிகர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி;எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” தெரிவித்துள்ளார்.
Thank you note#ajithkumar #AjithKumarRacing #24hdubai #AKRacing #DubaiRaceWeekend #racing #414racing pic.twitter.com/RM8BY177wp
— Ajithkumar Racing (@Akracingoffl) January 15, 2025
பொதுவாக நடிகர் அஜித் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளமாட்டார். சோசியல் மீடியாவிலேயே இல்லாத நடிகரான இவர், தனது படத்தின் புரோமோஷனுக்கு கூட வரமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தான் மிகவும் நேசிக்கும் கார் ரேஸிற்காக ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து நெகிழ்ந்து போன அஜித், இந்த வீடியோவை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கார் ரேஸிங்கில் வெற்றி வாகை சூடிய அஜித்தின் Unseen போட்டோஸ்!