90களில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை மாளவிகா, தன்னுடைய 45 வயதிலும் ஃபிட்டாக வைத்துக்கொள்ள பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் இதோ.

பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகை மாளவிகா. இவருடைய உண்மையான பெயர் Shweta Konnur Menon என்றாலும், சினிமாவுக்காக தன்னுடைய பெயரை மாளவிகா என மாற்றிக்கொண்டார்.

இதையும் படிங்க: 40 வயசுலயும் 20 வயசு பீலிங்! மாடர்ன் ட்ரெஸில் த்ரிஷா கொடுத்த முரட்டு போஸ்!
1999 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி, அஜித்தை வைத்து இயக்கிய 'உன்னைத்தேடி' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மாளவிகா அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றிக் கொடிக்கட்டு, சீனு, லவ்லி, பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஐயா, போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார்.

2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, சுமார் ஒரு வருடங்களுக்கு மேல் ஓடிய சந்திரமுகிரிய திரைப்படத்திலும் மாளவிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் மாளவிகாவுக்கு, ஒரு கட்டத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில்... திருட்டுப் பயலே, கைவந்த கலை, திருமகன், மணிகண்டா, போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அதே போல் சித்திரம் பேசுதடி திரைப்படத்தில், இவர் ஆடிய வாளமீன் விலாங்குமீன் டான்ஸுக்கு இப்போது வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு, சுமேஷ் மேனன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா திருமணத்திற்கு பின்னர் சில தமிழ் படங்களில் சிறப்பு தோற்றத்தில் தலைகாட்டினார்.

கடைசியாக இவர் நடிப்பில் 'ஆறுபடை' என்கிற திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் திரைப்படம் வாய்ப்புகள் தேடிச் சென்ற போதிலும், அதனை நிராகரித்த மாளவிகா தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

கூடிய விரைவில் திரைப்படங்களில் இவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில், அதற்கு ஏற்ற போல் இவர் சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக 45 வயதிலும் ஃபிட்டாக இருக்க காரணம், தன்னுடைய உடற்பயிற்சி தான் என்பதை பிரதிபலிக்கும் விதமாக இவர் பல ஒர்க் அவுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில், அதிகமான ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Raai Laxmi: கவர்ச்சியில் மியா கலீஃபாவையே மிரளவிடும் ராய் லட்சுமி! ஹாட் பிகினி போட்டோஸ்!