பாலய்யா என்றாலே சர்ச்சை தானே... இதெல்லாம் ஒரு டான்ஸ் ஸ்டெப்பா..? தெறிக்கும் மீம்ஸ்கள்... டபிடி, டிபிடி என்ன கருமம்டா இது..?
பொதுவாக தெலுங்கு படங்கள் என்றாலே கலர் கலராக ட்ரெஸ் போடுவாங்க.. டப்பாங்குத்து டான்ஸ் அதிகமா இருக்கும்.. நம்ப முடியாத விஷயங்கள் நடக்கும் என்று நம்பியது ஒருகாலம். சமீபமாக தேசிய விருதைகளை அள்ளி வரும் திரைத்துறையாக டோலிவுட் மாறி உள்ளதை மறுக்க முடியாது.. ஆனாலும் கூட, தன்னை மாற்றிக் கொள்ளாத ஒரு நடிகர் அங்கு இருக்கிறார் என்றால் அது பாலய்யா என்று செல்லமாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணா தான் அது..
தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்டிஆர்-ன் மகனான பாலகிருஷ்ணா தான் அறிமுகமான காலந்தொட்டு வித்தியாசமான நடன அசைவுகளாலும், நம்ப முடியாத காட்சிகளில் நடிப்பவராகவும் அறியப்பட்டு வருகிறார். ஆனால் இன்றைய Gen Z காலகட்டத்தில் அவர் ஒரு மீம் மெட்டீரியலாக பார்க்கப்படுகிறார் என்று தெரிந்தும் அதனையே தனக்கான மார்க்கெட்டிங் டெக்னிக்காக அவர் மாற்றிக் கொண்டதெல்லாம் நம்ப முடியாத விஷயம். 
இதையும் படிங்க: முரட்டு பார்வை! மூட் அவுட் செய்யும் அழகில் அதிதி ஷங்கர்!
பாலகிருஷ்ணா நடித்து பாபி கோலி இயக்கி வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ள படம் டாக்கு மகாராஜ். இந்தி படவுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஊர்வசி ரௌடேலா கதாநாயகியாக நடிக்கிறார். இதேபடம் மூலமாக வில்லனாக தெலுங்கு படவுலகில் அடியெடுத்து வைக்கிறார் பாபி தியோல். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டபிடி டிபிடி (DABIDI DIBIDI) என்ற பாடல் யூ டியூபில் சமீபத்தில் வெளியானது. தமன் மற்றும் வாக்தேவி இப்பாடலை பாடியுள்ளனர். தெலுங்கின் பிரபலமான சேகர் மாஸ்டர் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
இந்த நடன அசைவுகள் தான் இப்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. இந்திய திரையுலகில் கடந்த 70 ஆண்டுகளில் நடனம் பெரும் மாற்றங்களை சந்தித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் கூட நளினம், புதுமை ஆகியவற்றையே அது அடிப்படையாக கொண்டிருக்கும். ஆனால் இந்த டபிடி டிபிடி பாடலில் 64 வயதான பாலய்யா, 30 வயதான ஊர்வசி ரௌடேலாவுடன் மேற்கொள்ளும் நடன அசைவுகள் ஆபாசத்தின் உச்சமாக தெரிகிறது.
ஆடைகளில் கவர்ச்சி என்பதை மெல்ல மெல்ல இந்திய சமூகம் ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டது. ஆனாலும் நடனங்களில் குறைந்தபட்ச ஈர்ப்பு இருக்க வேண்டாமா? பெண்ணின் பின்புறத்தை ஆபாசமாக தொடுவதும், அடிப்பதும் எந்தவகையில் நடனம் என கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள். விதவிதமான அரைகுறை ஆடைகளில் கதாநாயகியின் உடம்பில் அனைத்து இடங்களிலும் தவில் வாசிக்கிறார் பாலய்யா. அதுவும் ஊர்வசி ரௌடேலாவின் பின்புறத்தை கையால் அடித்து அடித்து முகத்தில் ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார் பாருங்கள். ஏன் பாலய்யாவை எல்லோரும் ட்ரோல் செய்கிறார்கள் என்பதற்கு அது ஒன்றே போதும்.
இந்த பாடலை மீண்டும் புதிதாக (ஒழுங்காக) எடுக்க வேண்டும், இல்லையெனில் படத்தில் இருந்தே எடுக்க வேண்டும் என எக்ஸ் பக்கத்தில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த எதிர்ப்பே படத்தின் ஆரம்ப கட்ட வெற்றியாக பார்க்கிறதாம் படக்குழு..
பாலய்யாகாரு ఇది సరైనదేనా?
இதையும் படிங்க: திருமணத்திற்கு பின் கூடிய அழகு! ரம்யா பாண்டியன் பகிர்ந்த ஹனி மூன் போட்டோஸ்!