அந்தவகையில் பிடிக்கிறதோ, இல்லையோ பெரும்பாலானோர் பார்க்கின்ற நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார்.

சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவாக 24 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். 3 மாதங்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2 வாரங்களாக TICKET TO FINALE வெல்வதற்காக 10 சுற்றுகள் நடத்தப்பட்ட நிலையில் யார் அதனை வெல்வார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக், மஞ்சரி, பவித்ரா, அருண், விஷால், சௌந்தர்யா, ரயான், ராணவ் என 10 பேர் இருந்தனர். இதில் சனிக்கிழமை ராணவ் வெளியேற்றப்பட ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட போவது யார் என பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதையும் படிங்க: விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு கேள்வி.. நடப்பது பாடல் போட்டியா? பக்தி பிரசாரமா?

வாரஇறுதி நாளான நேற்று (5/1/25) பிக்பாஸ் சீசன் -8-ன் முதல் இறுதி போட்டியாளரை அறிவிக்கவும், TICKET TO FINALE-ஐ வென்ற நபருக்கு அதனை வழங்குவதற்காகவும் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே நுழைந்தார். புள்ளிகள் அடிப்படையில் ரயானுக்கு TICKET TO FINALE-ஐ விஜய் சேதுபதி வழங்கினார். கடைசி போட்டியாளராக நுழைந்து முதல் இறுதிப்போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி என ரயான் கூறினார். போட்டியாளர்களை குடும்பத்தினர் சந்திக்கும் சுற்றின்போது ரயானை, அவரது அக்கா பாரதி கடுமையாக திட்டி இருந்தார். நீ தான் TICKET TO FINALE-ஐ வெல்ல வேண்டும் என சவால் விட்டிருந்தார். அது நிறைவேறி இருக்கிறது.

அதேபோன்று EVICTION PROCESS நடைபெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் போட்டியில் இருந்து மஞ்சரி வெளியேற்றப்பட்டார். இந்த அறிவிப்பைக் கண்டு சக போட்டியாளர்கள் அதிர்ந்து போயினர். குறிப்பாக முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் கண்ணீர்மல்க மஞ்சரி பற்றி பேசியது உருக்கமாக இருந்தது. நடிகர் விஜய் சேதுபதி கூட, மஞ்சரி பற்றி மிக உயர்வான சொற்களை கூறி வழியனுப்பி வைத்தார்.
கடைசியாக முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக், பவித்ரா, அருண், விஷால், சௌந்தர்யா, ரயான் 8 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் பணப்பெட்டியுடன் இந்தவாரம் வெளியேறுவார். MIDWEEK EVICTION என்ற முறையில் மேலும் 2 பேர் வெளியேற்றப்படலாம். கடைசி 5 பேரே இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள். இவர்களில் ஒருவரே வெற்றியாளராக மாறுவார்.
பிக்பாஸ் சீசன்களில் இதுவரை வெற்றி பெற்றவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ஆரி, ராஜு, முகமது அசீம், அர்ச்சனா ஆகியோர் வென்றுள்ளனர். இம்முறை அந்த கோப்பையை தட்டிச் செல்லப்போவது யார் என்பது இன்னும் 2 வாரங்களில் தெரிந்து விடும்.
இதையும் படிங்க: கைவிட்ட பிக்பாஸ்! மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்த தர்ஷா குப்தா - சும்மா சுர்ருன்னு ஈர்க்கும் போட்டோஸ்!