சௌந்தர்யாவை ரசிகர்கள் செல்லமாக சவுண்டு என அழைத்து வந்தாலும், இவருடைய உண்மையான பெயர் சௌந்தர்யா நஞ்சுண்டன்.

இவருடைய தந்தை சென்னையில் ஐஸ்வர்யா பேக்கிரி என்கிற கடையை நடத்தி வருகிறார்.

சென்னையில் மட்டும் 4 கிளைகள் உள்ளது.

பணக்கார குடும்ப பின்னணியை சேர்ந்த, சௌந்தர்யா இளம் வயதில் தன்னுடைய குரல் மூலம் பல அவமானங்களை சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க: அருண், தீபக்-க்கு டாடா சொன்ன பிக்பாஸ்.. தர்ஷிகாவின் வருகையால் விஷாலுக்கு நெருக்கடியா?....
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் பலர் இவரது குரலை வைத்து கேலி செய்வது போல் பேசியதையும் பார்க்க முடிந்தது.

ஆஹா ஓடிடி-யில் 'வேறமாரி ஆபிஸ்' என்கிற வெப் தொடரில் நடித்ததன் மூலம் பேம்ஸ் ஆனார்.

இதுதவிர ரஜினிகாந்தின் தர்பார், மோகன் ஜி இயக்கிய திரெளபதி, துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் செளந்தர்யா.

ஆனால் இவரை அதிகம் கவனிக்க வைத்தது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்த சௌந்தர்யா ஃபைனல் வரை வந்தார்.

தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான விஷ்ணுவுக்கு பிக்பாஸ் வீட்டின் உள்ளே லவ் புரபோஸ் செய்து அதிர வைத்தார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையேடு காதலருடன் டேட் செய்ய துவங்கியுள்ள சௌந்தர்யா குட்டை உடையில் விதவிதமாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் தட்டி விட, அவை வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கைவிட்ட பிக்பாஸ்! மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்த தர்ஷா குப்தா - சும்மா சுர்ருன்னு ஈர்க்கும் போட்டோஸ்!