இன்று பிரபல தனியார் தொலைக்காட்சியில் "கனா காணும் காலங்கள்" என்ற தொடர்கள் வந்தாலும், திரையில் 'இனிது இனிது' என்ற படம் வந்தாலும், 'சாட்டை' என பல நட்பு ரீதியான படங்கள் வந்தாலும், தனுஷின் நடிப்பில் வெளிவந்த "துள்ளுவதோ இளமை" படத்திற்கு இணை இருக்காது. அந்த அளவிற்கு உயர்நிலைப் பள்ளி படிப்பில் ஆறு சிறுவர்களின் வாழ்க்கை கதையையும் பள்ளியில் அனைவரும் ஒன்றாக சேரும் தருணத்தையும் வெளிப்படுத்தும் படமாக இந்த படம் அமைந்திருக்கும்.

அப்படிப்பட்ட துள்ளுவதோ இளமை திரைப்படத்தில், நடிகர் தனுஷுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் கதாப்பாத்திரமாகவும் பாத்ரூமில் இருக்கும் தனுஷை நிர்வாணமாக்கி அதில் சந்தோஷப்படும் கதாபாத்திரமாகவும் தத்ரூபமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகர் அபிநய். இப்படி துள்ளுவதோ இளமை படத்தில் சாக்லேட் பாய் இமேஜில் வலம் வந்த அபிநயின் திறமையை பார்த்து அவருக்கு தொடர்ந்து 8 பட வாய்ப்புகள் வந்தது. இதனை பார்த்து தன் கெரியர் செட்டாகிவிட்டது என அபிநய் சந்தோஷப்படுவதற்குள் அத்தனை பட வாய்ப்பும் கையை விட்டு நழுவி சென்றது.
இதையும் படிங்க: ஹனிமூனில் முதல் படம் NEEK... மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்.. உற்சாக மழையில் தனுஷ்..!

மேலும், துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு அபிநய்க்கு, அடுத்த படமாக ஜங்ஷன் படம் அமைந்தது. இதனை அடுத்து ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் அப்படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார். பின்னர் கிடைத்த சில வாய்ப்புகளும் பறிபோக முற்றிலுமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல், போதிய வருமானம் இல்லாமல் அம்மா உணவகங்களில் சில காலமாக சாப்பிட்டு வருவதாகவும் சிங்கிள் ரூமில் தங்கி வருவதாகவும், கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் அபிநய்.

இந்த விரக்தியில், வீட்டில் பெண் பார்த்த போதிலும் தனக்கு விருப்பம் இல்லை என கூறி தற்பொழுது வரை கட்டபிரம்மசாரியாகவே வாழ்ந்து வருகிறார். இதனால் அவர் ஒரினச்சேர்க்கையாளர் என பலரும் கூறி வந்த நிலையில், நான் அப்படி பட்டவன் இல்லை என விளக்கம் அளித்தார். இப்படி வாழ்க்கையை வெறுத்து போய் சுற்றித்திரிந்தவர் இன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

திடீரென, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிநயின் உடலில் வயிறு வீங்கி ஆள் எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்தது வருகின்றனர்.

இதனை அடுத்து, வீடியோவில் பேசிய, அபிநய், தனக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக போராடி வருவதாகவும், இதுவரை தன்னுடைய மருத்துவ செலவுக்கு மட்டுமே ரூ.15 லட்சம் செலவாகி உள்ளதாகவும் . அடுத்த கட்ட சிகிச்சைக்கு இன்னும் ரூ. 28.5 லட்சம் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் சினிமா மட்டும் வாழ்க்கையல்ல அபிநய்...அதையும் தாண்டி பல வேலை வாய்ப்புகள் உள்ளது. அதனை தேர்ந்தெடுத்து இருந்தால் இன்று இந்த நிலை உங்களுக்கு வந்திருக்காது என கூறி வருவதுடன் தங்களது உதவி கரங்களையும் நீட்டி வருகின்றனர். நடிகர்களுக்கு சக நடிகர்களே உதவி செய்யாததால் தான், இப்படி வீடியோ போட்டு தன்னுடைய நிலையை கூறும் அளவிற்கு சினிமா துறையினரின் வாழ்க்கை மாறி உள்ளது என வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் தனுஷ் இயக்கத்தில்.. கோல்டன் ஸ்பேரோவின் சாதனை