"கூட மேல கூட வச்சு கூட்டிகிட்டு போறவளே" என்ற பாடலையும் "உன் மேல ஒரு கண்ணு" என்ற பாடலையும் கேட்டால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், விஜய் சேதுபதி, மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் எனலாம். ஆனால் இவர்களை காட்சிகளாக மட்டுமே நாம் நினைவு கூற முடியும். பாடல்கள் என்றால் நம் நினைவுக்கு வருபவர் இசையமைப்பாளர் டி.இமான் தான்.

இசைத்துறையில் எப்படி ஏ ஆர் ரகுமான், விஜய் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, ஹிப்பாப் ஆதி, ஜிவி பிரகாஷ், அனிருத் என பலரும் காதல், ரேப், மெலடி, ராக், வைப் என பலவகையான பாடல்களையும் இசைகளையும் உருவாக்கினாலும்,கிராமத்து பாடல்களையும், கிராமத்து காதல்களையும், கண்ணீர் கவலைகளையும் தனித்துவமாக காண்பித்து, தனது இசையால் அனைவரையும் கலங்கடிக்க செய்து காதல் வயப்படுத்துவார் என்ற பெருமைகள் அனைத்திற்கும் சொந்தக்காரர் தான் டி.இமான்.
இதையும் படிங்க: சீறிப்பாய்ந்து வரப்போகும் 'வாடிவாசல்' திரைப்படம்.. அட்டகாச அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!

இப்படிப்பட்ட,இமான் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும் இவரை அதிகமாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் சூரி உடன் காணலாம். எந்த மேடை நிகழ்ச்சிகள் என்றாலும் எந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி என்றாலும் இவர்கள் மூவரும் ஒரே கூட்டணியாக நின்று அண்ணன் தம்பி என்று பேசிக் கொள்வதை அனைவரும் பார்த்து இருக்க முடியும். இப்படி அண்ணன் தம்பி போல் ஒன்றாக உறவாடிய சிவகார்த்திகேயன் மீது ஒருநாள் பயங்கரமான குற்றச்சாட்டை வைத்தார் டி.இமான். நம்பி வீட்டுக்குள் வைத்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் காதல் வயப்பட்டு உள்ளதாக கூறி அனைவரையும் திடுக்கிட வைத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காலப்போக்கில் இந்த செய்தி மக்கள் மனதில் இருந்து நீங்கி விட்டது.

இப்படி இருக்க நீண்ட நாட்கள் கழித்து, தனது பிரச்சனைகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மீண்டும் தனது இசை பயணத்தை தொடங்கி உள்ள டி இமான், தற்பொழுது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் "சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியில் நடுவராக தனது கமெண்ட்ஸ்களை கொடுத்து வருகிறார். இப்படி தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் மத்தியிலும் நடுவராகவும் இசைகளையும் வாசித்துக் கொண்டு, எப்பொழுதுமே பிசியாக இருந்து கொண்டிருக்கும், இவரை சீண்டி இருக்கின்றனர் ஹேக்கர்கள். தற்பொழுது தன்னுடைய எக்ஸ் தளத்தை ஹேக் செய்து விட்டார்கள் என இமான் புகார் அளித்து உள்ளார்.

இதனைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ள இமான். அதில், "எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஹேக்கர் எனது கணக்கு தொடர்புடைய மின்னஞ்சலையும் மாற்றி இருக்கிறார். மேலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் எனது எக்ஸ் பக்கத்தில் பல பதிவுகளையும் பதிவிட்டு இருக்கிறார்கள். எனது கணக்கை விரைவில் மீட்டு தருமாறு எக்ஸ்த்தல நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் இருப்பதால் என்னை பின்தொடர்பவர்களுக்கான தொடர்பு எனக்கு மிகவும் முக்கியமானது. தற்போது என்னுடைய எக்ஸ் பக்கத்தில் இருந்து ஏதாவது பதிவுகள் வந்தால் அதனை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். எக்ஸ் நிர்வாகம் உடனடியாக என்னுடைய கணக்கை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உங்களின் ஆதரவுக்கு நன்றி எனது கணக்கை திரும்ப பெற்றவுடன் உங்களுக்கு தகவலை தெரிவிக்கிறேன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு வீட்டிலும் பிரச்சனை, நாட்டிலும் பிரச்சனை, இப்பொழுது இணையத்திலும் பிரச்சனை என அவரை ஆசுவாசப்படுத்தி வருகின்றனர் நெட்டிசங்கள்
இதையும் படிங்க: நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரெல்லாம் கிடையாது.. ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார்.. குஷ்பூ காட்டம்..!