கோமாளி மற்றும் லவ் டுடே படம் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரும் புகழை தேடி தந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான AGS என்டேர்டைன்மெண்ட் கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் ஆகியோர் இணைப்பில் உருவாகியுள்ள "டிராகன்" திரைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது.

கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதனை தொடர்ந்து, இப்படத்தின் பிரமோஷன் பட வெளியீட்டுக்கு முன் தனியார் யூடியூப் சேனலில், விஜே சித்து, ஹர்ஷத்கான் உடன் பிரதீப் ரங்கநாதனும், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து முதலானோர் பங்கேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் படம், டான் 2 தானே என கலாய்த்து தள்ளி இருந்தனர், மேலும் நண்பன், டான், இனிது இனிது போன்ற படங்களில் இருந்து காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாமே என பேசி காமெடியாக ப்ரமோஷன் செய்தனர், இது மக்கள் மனதில் ஆழமாக பதிந்து படத்தை பார்க்க ஆர்வம் தூண்டியது.
இதையும் படிங்க: Kayadu Lohar: மேக்கப் போடாமல் கூட இம்புட்டு அழகா? கயாடு லோஹர் கியூட் போட்டோஸ்!

மேலும், இன்ஸ்டாவில் ஒரு பெண், இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்த அனைவரும், வாழ்க்கையில என்ன பண்ணுவது என்று தெரியாமல், எப்படி உருப்புடுவது என்பது தெரியாமல் இருந்தீங்கன்னா.. பிரதீப் அண்ணா உங்களுக்கு ப்ளோ ஜாப் கொடுத்துட்டு போவாரு.. இந்த படத்துல வருவதை பார்த்து 42 அரியர் வைத்து வாழ்க்கையில் முன்னேற நினைத்தீர்கள் ஆனால் கண்டிப்பாக பிச்சைதான் எடுக்கனும்.
அதுக்கும் மேல மிஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் ஸ்ட்ரெக்ச்சர் மற்றும் அல்காரிதம் படிச்சவங்களே வேலைதேடி கஷ்ட்டப்பட்டு இருக்கின்றனர், இது தெரியாமல் இப்படி பட்ட படத்தை எடுத்து, சமூகத்தை சீர்கொலைக்கும் படம் என்றால் அது இந்த படம் தான் என ஆவேசமாக பேசி இருந்தார். இந்த நெகட்டிவிட்டியும் படத்திற்கு பாசிட்டிவாக அமைந்தது. பின் படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த பெண்ணை வறுத்தெடுத்தனர்.

அதுமட்டுமல்லாமல், பிரதீப் ரங்கநாதன் சிவகார்த்திகேயன் போல், நீங்கள் எங்கள் வளர்ச்சியை தடுத்தாலும், ஆலமரம் போல் எழுந்து நிற்போம் என கவலையுடன் கூறியது அனைவரையும் வறுத்தமடைய செய்தது. மேலும் படத்தின் இயக்குனர் தனது தாய் தந்தை இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு கீழ், "நான் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்ட, எனது பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத என்ஜினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் தற்பொழுது பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்பு தான் இந்த டிராகன் படம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சூழலில், டிராகன் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, பேசிய இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து தெலுங்கில் பிரபல நடிகரான மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.
என்னவெனில் தான் இயக்கிய "ஓ மை கடவுளே' படம் வெளியான போது அப்படத்தை பார்த்த நடிகர் மகேஷ்பாபு அதனை பாராட்டி ஒரு ட்வீட் போட்டார். அதனை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்த்து கொண்டாடினர். அதேபோல், 'டிராகன்' படத்தையும் அவர் பார்க்க வேண்டும், நிச்சயமாக இந்த படமும் அவருக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

இந்தநிலையில், பிப்ரவரி 21ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியான டிராகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் இன்றும் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க, திரையரங்குகளில் வெற்றிகரமாக 50-வது நாளை நிறைவு செய்துள்ளது டிராகன் திரைப்படம் என ஏஜிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் இந்தபடம் நூறு நாட்களை கடந்து ஓடும் என தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஷ்வத் மாரிமுத்து...! ஷாக்கில் ரசிகர்கள்...!