2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிபில்,டி. செ. ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்து, முதன்முதலாக ஓடிடியில் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் "ஜெய் பீம்". 1993இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் கதை முழுவதும், இருளர் சமூகத்தை சேர்ந்த செங்கேணி மற்றும் ராஜாக்கண்ணு தம்பதியினரைப் பின்தொடர்ந்து செல்லும் விதமாக இருக்கும்.

காவலர்கள் பொய் கேஸ்களை தங்கள் மீது போடுவதாக உண்மையை உறக்க சொல்லும் விதமாக அமையும் இப்படத்தின் கதையில், ராஜாகண்ணு செய்யாத தப்பை ஒப்புக்கொள்ள வைக்க காவல்துறையினர் தாக்குவதும், பின்னர் ஒரு நாள் ராஜாக்கண்ணு,மொசக்குட்டி, இருட்டப்பன் மூன்று பேரும் காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போனதாக காவல்துறையினர் சொல்ல,ராஜாக்கண்ணு மனைவி செங்கேணி தனது கணவருக்கு நீதி கிடைக்க வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாட, பல போராட்டங்களுக்கு பின் ராஜாக்கண்ணு இறந்ததாகவும் அவர் மரணம் லாக்கப் டெத் எனவும் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.
இதையும் படிங்க: சூர்யாவை பாலோ செய்யும் நயன்தாரா... முதலில் அஜித் இப்போ சூர்யா... ஓடிடியிலும் போட்டியா...!

இப்படத்தின் பல காட்சிகள் சென்னை மற்றும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. மேலும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தயாரிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் ஜூலை 2021ல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி, செப்டம்பரில் நிறைவடைந்தது. இதனை அடுத்து இப்படம் தியேட்டரில் வெளியிடப்படாமல் முதன்முறையாக ஓடிடியில் வெளியிட்டது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து பல எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் மட்டும் அல்லாது இப்படத்தை பார்த்த தமிழக முதலமைச்சரும் இருளர்களுக்கு பட்டாவை வழங்கி கவுரவித்தார்.

இப்படி இருக்க, ஜெய் பீம் போன்ற சிறப்பான படத்தை டி. செ. ஞானவேல் மீண்டும் எப்பொழுது எடுப்பார் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் அதற்க்கான பதிலை வழங்கி இருக்கிறார் இயக்குனர். அதன்படி மீண்டும் இந்த கூட்டணி இணைய இருக்கிறது. சூர்யா நடிப்பில் ரெட்ரோ, சூர்யா45 என அடுத்தடுத்த படங்கள் வெளிவர தயாராக இருக்கிறது. மேலும், வாடிவாசல் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது. இதனிடையில் கங்குவா 2 படமும் லிஸ்டில் உள்ளது.

இத்தனை படங்களை சூர்யா கையில் வைத்திருக்கும் நிலையில், அவரின் பட லிஸ்டில் ஜெய் பீம் படமும் தற்பொழுது இடம் பெற்று உள்ளது. எனவே சூர்யா, ஜெய் பீம் இயக்குனருக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்துள்ளதால், இப்படத்தின் முதல் கட்ட வேலைகள் தொடங்கி உள்ளது என்றும் ஜெய் பீம் படத்தை காட்டிலும் இப்படம் நிச்சயம் பல மடங்கு பவர்ஃபுல்லாக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர் படக்குழுவினர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் டி. செ. ஞானவேல் அடுத்து யாருடைய வாழ்க்கையை படமாக்க போகிறார் என ஆவலுடன் காத்துவருவதாக கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: சூர்யாவை பாலோ செய்யும் நயன்தாரா... முதலில் அஜித் இப்போ சூர்யா... ஓடிடியிலும் போட்டியா...!