இந்திய திரையுலகில் நடிகைகளின் சம்பளம் குறித்ததான போட்டிகள் அதிகரித்து உள்ளது. இப்படியிருக்க நடிகைகள் சம்பளத்தில் டாப் நம்பர் ஒன்றாக இருக்கும் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி வருகின்றனர் நடிகைகள். சம்பள வரிசையில்தனது முதல் இடத்தை பறிகொடுத்து நடிகை நயன்தாரா, தற்பொழுது 'டெஸ்ட்' என்கின்ற ஓ.டி தளத்தில் வெளியாகும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் "மூக்குத்தி அம்மன்" இரண்டாவது பாகத்தில் இவர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனை அடுத்து இப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்பொழுது கர்நாடகாவில் பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் "ராஷ்மிகா மந்தனா" சம்பளத்தில் நடிகை நயன்தாராவுக்கு அடுத்தபடியாக உள்ளார். சினிமாவில் அனைத்து நடிகர்களுடனும் நடித்து வருகின்ற நடிகை ராஷ்மிகா, தற்பொழுது பாலிவுட்டில் சல்மான் கானுக்கு ஜோடியாக "சிக்கந்தர்" என்ற படத்தில் நடித்து உள்ளார். தற்போதைய நிலவரப்படி இப்படத்திற்காக அவர் ரூ.13 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
இதையும் படிங்க: நதியா பதிவிட்ட இன்ஸ்ட்டா பதிவில் ரவிமோகன்...! ஒரே பதிவில் ரசிகர்களை கவர்ந்து அசத்தல்...!

எப்பொழுதும் சம்பளத்திலும் சரி...படத்திலும் சரி...டாப் நம்பர் ஒன்னாக இருந்த நடிகை திரிஷா, தற்பொழுது சம்பளத்தில் பின்தங்கி.. நடிப்பிலும் பின்தங்கி, நயன்தாரா மற்றும் ரஷ்மிகாவிற்கு அடுத்தபடியாக உள்ளார். 90களில் கனவு நாயகியாக திகழ்ந்த திரிஷா தற்பொழுது 96 படத்திலும், லியோ படத்திலும், விடாமுயற்சி படத்திலும் நடித்து இன்றைய இளசுகளையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். இப்படி இருக்க, இவர் தற்போது 'விஸ்வம்பரா' என்ற படத்திற்காக ரூ.12 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

இவர்களை தொடர்ந்து நடிகை சமந்தாவும் தற்பொழுது நடித்து வரும் படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இவர்களை போல தற்பொழுது கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை கியாரா அத்வானி. இந்த நிலையில் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதற்கு பின்பு தற்பொழுது கன்னடத்தில் உருவாகும் 'Toxic' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்கி நயன்தாராவின் இடத்தை பிடித்து இருக்கிறார்.

என்னதான் இவர்கள் அனைவரும் நாங்கள் சம்பளங்களை அதிகமாக வாங்கி வருகிறோம் என்று சொன்னாலும், தற்பொழுது பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் நடித்து வரும் சாய்பல்லவி இப்படத்திற்கு அவர் சம்பளமாக ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பேசி நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாக சைதன்யாவை காதலிக்க இந்த ரசிகர் தான் காரணம்..! மனம் திறந்த சோபிதா துலிபாலா...!