படம் எடுக்க ஆசைப்படுபவர்கள் கூட இனி சினிமாத்துறையை விட்டு ஓடும் அளவிற்கு பல சிக்கல்களை சந்தித்து வருகிறது எல்2எம்பூரான் திரைப்படம். மலையாள திரையுலகின் ஹிட் நடிகரான பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' திரைப்படத்தின் 2-ம் பாகமாக `எல் 2: எம்பூரான்' படம் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இப்படத்தின் முதல் பாகத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. முதல் பாகத்தில் படத்தில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

எல்2 எம்பூரான் மார்ச் 27ம் தேதி வெளியான நிலையில் , இப்படத்தில் இந்து மதத்துக்கு எதிரான காட்சிகள் அதிகம் உள்ளதாகவும் மதவாத சண்டையை இந்த படம் ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாகவும் சில அமைப்புகள் கூறியுள்ளனர். அதன் படி, எம்புரான் படத்தின் தொடக்கத்தில் 'வில்லன் பால்ராஜ்' இஸ்லாமிய குடும்பத்தை கூண்டோடு அழிப்பது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது. மறறொரு வில்லன் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் அந்த பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்யும் காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்று உள்ளன.
இதையும் படிங்க: வருமானவரி துறையினர் பிடியில் பிருத்விராஜ்...! எல் 2 எம்பூரான் படத்திற்கு வந்த புதிய சிக்கல்..!

ஏற்கனவே 'மார்கோ' என்ற படத்தில் கர்ப்பிணிப் பெண் வயிற்றில் இருந்து சிசுவை வெளியே எடுப்பது போன்ற கொடூரமான காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மத பிரச்னையை தூண்டும் விதமாக இப்படத்தின் பல காட்சிகள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர், 24 காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர் படக்குழுவினர். இதனை பார்த்து ரசிகர்கள் கொந்தளித்து போயிருந்த வேளையில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

எல்2 எம்புரான் திரைப்பட இயக்குநரான பிரித்விராஜுக்கு வருமான வரித்துறையினர் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். எம்புரான் திரைப்படத்தை இயக்கிய பிரித்விராஜ் இப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இப்படி இருக்க, எம்புரான் படத்தில் பணியாற்றியதற்காக பிரித்விராஜ் ரூ.40 கோடி தனியாக பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பணத்தை கட்டுமான நிறுவனத்தின் பெயரில் பெற்று உள்ளார் பிரித்விராஜ். மேலும் கடுவா, ஜன கண மன மற்றும் கோல்ட் ஆகிய படங்களின் ஊதியம் குறித்தும் அவரிடம் வருமான வரித்துறை விளக்கம் கேட்டு உள்ளனர்.

இப்படி அடுக்கடுக்காக பல சர்ச்சைகளில் சிக்கும் இப்படம் வசூலில் ரூ.250 கோடியை கடந்து மலையாள திரையுலகில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயனின் பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, "எம்புரான் படத்தில் வரும் ஒரு சிறு காட்சிகளை வைத்து பாஜக, சங் பரிவார் அமைப்புகள் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர் ஆனால் எம்புரான் கம்யூனிசம் படம் கிடையாது" என்று தெரிவித்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் நன்றாக ஓடிக்கொண்டிருந்த படத்தை உங்கள் அரசியலால் பார்க்க முடியாத படி செய்துவிட்டிர்களே என புலம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே வழக்கு.. 24 காட்சிகள் நீக்கம்..! ஒரு நொடியில் ஃபிளாப் ஆன எல்2எம்பூரான் திரைப்படம்..!