ஒருவருக்கு நாம் உதவி செய்தால் அதற்கான பலனை யாரவது ஒருவர் மூலமாக கடவுள் கொடுப்பார் என பலபேர் கூறுவதை நாம் கேட்டு இருப்போம் அப்படி ஒரு சம்பவம் தான் சின்னத்திரை காமெடி தொகுப்பாளருக்கு கிடைத்து உள்ளது என்றால் நம்ப முடிகிறதா. ஆம், இன்று சினிமா துறையில் கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் பல போராட்டங்களுக்கு பிறகு இன்று கதாநாயகனாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளார். இப்படி அவரது உழைப்புக்கு கிடைத்த பலனை இன்று அவர் அனுபவித்து கொண்டு இருக்கிறார்.

இவரை போலவே, பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடி ஷோவில் போட்டியாளராக வந்து தன்னை தாழ்த்தி அனைவரையும் சிரிக்க வைத்து பிரபலமானவர் தான் சின்னத்திரை பாலா. ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்து 10 நிமிடங்கள் தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டு பணத்தை பெற்று சென்று விடுவார்.
ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் இவர் இருந்தாலும் சட்டை வாங்க காசு இல்லாமல் மிகவும் பழைய ஆடைகளை உடுத்தி கொண்டு செல்வாராம். இவரை கவனித்த அந்த தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அவருக்கு தைரியம் கூறி அவருக்கு சர்ப்ரைஸாக ஒரு பெட்டி முழுவதும் ட்ரெஸ் மற்றும் ஷுக்களை வாங்கி கொடுத்தாராம். அவர் யாரும் இல்லை தொகுப்பாளர் மகாபா ஆனந்த் தான். இதனை பலமுறை பாலா மேடையில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: பாடல் நிகழ்ச்சியில் தனது ஆசையை கூறிய பெண்..! சற்றும் தயங்காமல் ராகவா லாரன்ஸ் செய்த செயல்...!

இதனை அடுத்து தனக்கு வரும் சம்பளங்களில் ஒரு பகுதி பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்ய முடிவு எடுத்த பாலா, தனது இன்ஸ்ட்டா மூலம் உதவி என வருபவர்களை தேர்வு செய்து, உதவி செய்ய ஆரம்பித்தவர் இன்று பல குடும்பங்களில் உதவி செய்யும் நம்பிக்கை நாயகனாக மாறியுள்ளார். இதனை அடுத்து இவர் மக்களுக்கு செய்து வரும் உதவிகளை பார்த்த ராகவா லாரன்ஸ் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேள் என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார்.

இதனை அடுத்து இருவரும் சேர்ந்து, ஆம்புலன் வாங்கி கொடுப்பது, லேப்டாப் வாங்கி கொடுப்பது, கடை வைத்து கொடுப்பது, குடிநீர் வசதி செய்து கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, வீடு கட்டி தருவது, மருத்துவ உதவிகள் செய்வது என பல உதவிகளை செய்து மக்கள் மனதில் லாரன்சும் பாலாவும் நீங்கா இடம்பிடித்து உள்ளனர்.
இவர்களை பார்க்கும் பொழுது மக்கள் மனதில் நினைவுக்கு வருபவர் மறைந்த நடிகர் விஜயகாந்த் தான் என பலர் கூறுகின்றனர். அவர் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்பொழுது "என்னடா காசு காசு, செத்தா அர்னா கொடிய கூட எடுத்துட்டு தான் புதைப்பாங்க இருக்குற வரைக்கு நாலுபேருக்கு நல்லது செஞ்சிட்டு போங்கய்யா" என்றார். அதுபோல தான் இன்று இவர்கள் இருக்கின்றனர் என பல மக்கள் கூறிவருகின்றனர்.

இப்படி இருக்க, மக்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்து வரும் பாலாவை எப்படியாவது ஒரு படத்தில் நடிகராக நடிக்க வைத்து அழகுபார்க்க வேண்டும் என நினைத்த ராகவா லாரன்ஸ், அவரை வைத்து படத்தை தயாரிக்க நல்ல தயாரிப்பாளரை தேடி வந்துள்ளார்.
தற்பொழுது அதற்க்கான தயாரிப்பாளர் கிடைக்க, தற்பொழுது பாலா கதாநாயகனாக களமிறங்கி உள்ளார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷெரிப் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையில், நடிகர் பாலா கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் "BALA#01". இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "கதை சொல்ல வேண்டாம் ரஜினியுடன் நடித்தால் போதும்"..! கூலி படத்தின் அனுபவத்தை பகிர்ந்த உபேந்திரா..!