தமிழ் சினிமாவில், இதுவரை, மகிழ்திருமேனி இயக்கத்தில் 'தடையறத் தாக்க', ரவி தியாகராஜன் இயக்கத்தில் 'என்னமோ ஏதோ', ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கத்தில் 'பிரம்மோற்சவம்', ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்', ஹச் வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று',ராஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் 'தேவ்', செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே', ரவிக்குமார் ஆர் இயக்கத்தில் 'அயலான்', ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார் ரகுல் பிரீத் சிங்.

பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த ரகுல் பிரீத் சிங்கின் தந்தை ராஜேந்தர் சிங், ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். ஆதலால் தனது சிறுவதில் இருந்து டெல்லியில் உள்ள ராணுவ பள்ளியில் படித்து முடித்து, பின் டெல்லி 'ஜீசஸ் மேரி பல்கலைக்கழகத்தில்' ஸ்டிரிக்ட் ஆபிசர்கள் மத்தியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
இதையும் படிங்க: 'முத்துகுளிக்க வாரீங்களா'...! தனது கணவரை மயக்க வித்தியாசமான ஆடையில் ரகுல் ப்ரீத் சிங்...!

பின் வடிவழகியாக அவதாரம் எடுத்த ரகுல் பல போட்டிகளில் கலந்து வெற்றிகளை குவித்து, அதன் பின், சினிமாவில் நடிக்க வந்தார். இப்படி தனது வாழ்க்கை முழுவதையும் ஸ்டிக்ட்டாக கழித்த ரகுல், ஜாக்கி பக்னானியை திருமணம் செய்த பிறகு பல இடங்களுக்கு அவருடன் சென்று தனது வாழ்க்கையை இன்பமாக கழித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், ரகுல் பிரித் சிங் தனது காதல் ஜோடியான ஜாக்கி பக்னானியை திருமணம் செய்த பின், அவரை எங்கு அழைத்து சென்றாலும் கைகளை கோர்த்து கொண்டும், கட்டி அனைத்தபடியும், முத்தம் கொடுத்து அன்பை பகிர்வதும், நீச்சல் குளங்களில் ஒன்றாக குளிப்பதும் என பிசியாக தனது வாழக்கையை கழித்து வருவதுடன் அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பல இளசுகளின் இதயத்தை கொள்ளை கொண்டு வருகிறார்.

இப்படி தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வரும் ரகுல், உலக சுகாதார தினத்தையொட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கைக்கு எது முக்கியம் என்னும் வாக்கியங்களை அழகாக பதிவிட்டு உள்ளார்.

அதில், ஆரோக்கியமான மற்றும் கவனமுள்ள தேர்வுகள் மூலமாக உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். விருப்பமான புத்தகத்தை படியுங்கள். இயற்கையுடன் இணைந்திருந்தால் உங்களுக்கு அற்புதமான உணர்வு கிடைக்கும். பிடித்த விளையாட்டை விளையாடுங்கள்.

உங்களை அமைதிப்படுத்தவும், மன சமநிலையைக் கண்டறியவும் தியானத்தில் ஈடுபடுங்கள். ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் மட்டுமே, அது பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். எனவே ஜாலியாக இருங்கள். சிரித்துக்கொண்டே இருங்கள்.

ஏனெனில் மகிழ்ச்சியே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த மருந்து. குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். உங்கள் கனவுகளை அவர்களிடம் சொல்லுங்கள். உடல் என்ற விஷயத்தை மையப்படுத்தி இருக்கும் இந்த வாழ்க்கையை பாதுகாத்து வாழுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட ரகுல் பிரீத் சிங்..! புகைப்படங்களை வெளியிட்டு அசத்தல்..!