சூப்பர் ஸ்டார் படம் என்றால் இன்றும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அப்பவும் இப்பவும் எப்பவும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். இப்படி இருக்க சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி , நவாசுதீன் சித்திக் , சசிகுமார் , சிம்ரன் , த்ரிஷா கிருஷ்ணன் , மேகா ஆகாஷ் , மாளவிகா மோகனன் , மகேந்திரன் , பாபி சிம்ஹா , குரு சோமசுந்தரம் , ஆடுகளம் நரேன் , முனிஷ்காந்த் , விவேக் சனந்த் , விவேக் சனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படம் "பேட்ட".

இப்படமானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்165வது படமாகும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மொத்த ஸ்டைலையும் இப்படத்தில் காண்பித்து மிகவும் பிரம்மாண்டமான லைட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கார்த்திக் சுப்புராஜின் கலை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் எனலாம். இப்படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த படம் எனவும் கூறலாம். அந்த அளவிற்கு இப்படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.
இதையும் படிங்க: கூலி படத்தின் புதிய அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கமும் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இசையில் அனிருத் மிரட்டி இருப்பார். குறிப்பாக இப்படத்தில் வரும் "மரணம் மாஸ் மரணம்" என்ற பாடலும் "உல்லல்லா" என்ற பாடலும் இன்றும் ரசிகர்களால் கேட்கப்பட்டும் ரசிக்கப்பட்டும் வருகிறது.

இக்கதையில் ஹாஸ்டல் வார்டனாக "காளி" என்ற பெயரில் வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது குடும்பத்தையும் நண்பனையும் அழித்த சிங்காரத்தை தேடி சென்று, அவனது மகனான விஜய்சேதுபதியை வைத்து சிங்காரத்தின் கோட்டைக்குள் சென்று அவனை கொலை செய்வார். இப்படி மிரட்டும் படமாக இப்படம் அமைந்தது.

இந்த நிலையில், ரஜினி நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதனை தொடர்ந்து, ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இணையும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கு பின் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நயன்தாரா நடிக்கும் படத்துக்காக ரஜினி வாழ்த்து... ஆரம்பமே இப்படியா!!