மாதவனும் உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் "முன்னும் பின்னும் தெரியாத ஒருவருக்காக கண்ணீர் விடும் மனசு தான் கடவுள்" என்று கூறுவதை போல், அனைத்து உள்ளங்களுக்காக கவலை பட்டு கண்ணீர் சிந்தி தனது மரணத்தை இறைவனிடம் வேண்டிய 60 வயதான ஷிகான் ஹுசைனியின் வேண்டுதலுக்கு ஏற்ப இன்று அதிகாலை 1.40 மணியளவில் அவரது உடலில் இருந்து அவரது ஆன்மா பிரிந்தது. இப்படி இருக்க சமீபத்தில் அவர் பேசிய காணொளி அனைவரது கண்களில் இருந்து கண்ணீர் வரவைத்து வருகிறது.

அதில், பேசிய மறைந்த ஷிகான் ஹுசைனி, "கேன்சர் என்பது ஒரு வரம். ஆனால் எனக்கு வந்து இருப்பது சாதாரண கேன்சர் அல்ல, 'ஏ பிளாஸ்டிக் அநேமியா' என்ற நோய் எனக்கு உள்ளது. அதற்காக நான் பயப்படவில்லை வாழ்க்கையில் பயந்து கொண்டு இருப்பவன் தான் சாவுக்கு பயப்படுபவன், நான் 'கராத்தே மாஸ்டர்' எனக்கு வாழ்க்கையில் பயம் கிடையாது. ஆதலால் எனக்கு மரணத்தை கண்டு துளி கூட பயமில்லை. கண்டிப்பாக எனக்கு தெரியும் நான் இன்றைக்கு இருப்பேன்....நாளைக்கு இருக்கமாட்டேன் என்பது. காரணம் எனக்கு வந்திருப்பது சாதாரணமான கேன்சர் எல்லாம் கிடையாது . இதனை குணப்படுத்தவும் முடியாது.
இதையும் படிங்க: மரணத்தை முன்பே அறிந்த ஹுசைனி..! ஆன்மா கடவுளிடம்.. உடல் மாணவர்களிடம்.. இதயம் மட்டும்..!

என்னுடைய குடும்பத்தில் கேன்சர் என்பது யாருக்கும் கிடையாது. ஆனால் எனக்கு வந்துள்ளது. அதேபோல் நிறைய ஊர் சுற்றுபவர்களுக்கும், நிறைய 'ஷாக்' ஆகுபவர்களுக்கும் இந்த கேன்சர் வரும் என்று சொல்லுகிறார்கள். எனக்கு இந்த கேன்சர் வரும் அளவிற்கு நான் குடிகாரனும் இல்லை, புகைபிடிப்பவனும் இல்லை. ஆனால் மருத்துவர் மூன்றாவதாக சொன்ன காரணத்தை போல "ஷாக்" ஆனதால் எனக்கு இந்த நிலைமை என நினைக்கிறேன்.
காரணம் சமீபத்தில், என்னிடம் வில்வித்தை கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு என்று தனியாக கிரவுண்ட் எதுவும் கிடையாது. ஆனால் கஷ்டப்பட்டு போராடி ஒரு இடத்தை பெற்றோம். அந்த இடத்தின் பக்கத்திலும் ரோடு போட வந்தார்கள். எவ்வளவோ கூறினோம் ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து நான்கு நாட்கள் துக்கம் இல்லாமல் ஷாக்கில் இருந்தேன். ஆதலால் இந்த கேன்சர் வந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால், நான் உயிர் வாழ வேண்டுமானால் ஒரு நாளைக்கு இரண்டு யூனிட் ரத்தம் வேண்டும் என்று கூறிவிட்டார்கள். என்ன செய்வது என குழப்பத்தில் இருந்த பொழுது எனது நண்பர் என்னை மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்றார் அந்த நொடியில் திரும்பி வருவேனா இல்லையா என தெரியாது என்பதால் நான் ஆசையாக வளர்க்கும் கிளியையும் நாயையும் கொஞ்சி விட்டு தான் வந்தேன்.
நான் இறந்தால் என்னுடைய உடலை என் அலுவலகத்தில் உள்ள நாற்காலியில் மூன்று நாட்கள் வைக்க வேண்டும். எனது உடலில் இருந்து எடுத்த இரண்டு எழும்புகள் இங்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் என்னுடைய தாய் மரணித்த பொழுது அவரது தலையில் இருந்து எடுத்த முடியும் இங்கு உள்ளதால் இங்கு எனக்கான சிலையை வைக்க வேண்டும் என்பது எனது எண்ணம். மேலும் மூன்று நாள் கழித்து எனது உடலை மதுரையில் வைக்க வேண்டும். இதெல்லாம் எனக்கான ஆசை.

அதுமட்டுமல்லாமல், எனது மருத்துவ செலவிற்காக எனது இடத்தை விற்க போகிறேன். மேலும் எனது நண்பர்கள் ஒரே ஒரு வீடியோவை மட்டும் வெளியிடு, உனது சிகிச்சைக்காக பலரிடம் இருந்து பணம் பெற்று உன்னை காப்பாற்ற முயற்சிக்கிறோம் என கூறினார்கள். ஆனால் எனக்காக எந்த உறவுகளும் இல்லை மனைவி குழந்தைகளோ இல்லை என்பதால் யாரும் எனக்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டேன். எதுவுமே இல்லாத நான் வாழ்ந்து என்ன பண்ணப்போகிறேன்.

அதுமட்டுமல்லாமல், உலகத்தின் மிகப்பெரிய தமிழ் தாய் சிலையை நிங்கள் செய்ய வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அதற்காகவே எட்டு வருடம் காலேஜுக்கு சென்று படித்தேன். அந்த காலக்கட்டத்தில் எனது உடலில் இருந்தும் மற்ற மாணவர்களின் உடலில் இருந்து மாதம்... மாதம்... 3 மில்லி இரத்தம் எடுத்து, உலகத்தில் யாரும் எனக்கு முன்பு செய்யாத வகையில் அந்த இரத்ததை கொண்டு அம்மையாரின் 56 படத்தை ஓவியமாக வரைந்து கொடுத்தேன் மற்றும் சிலையை உருவாக்கினேன்.
இதனை பார்த்த அவர்கள் மிகவும் ஷாக் ஆகி, எனக்கு தாயுள்ளத்தோடு இப்படி எல்லாம் உங்களை வருத்திக்கொண்டு செய்யாதீர்கள் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என அறிவுரை வழங்கினார். பின் நாங்கள் நடத்திய நேஷனல் ஆர்ச்சிங் காம்பிடிஷனுக்காக யாரும் கொடுக்காத வகையில் ரூ.50 லட்சம் கொடுத்து உதவி செய்தார்.

உங்களுக்கு தெரியுமா எனக்கு குடும்பம் குட்டி இல்லைதான் ஆனால் என்னை இன்று பார்த்து கொள்கிறவர்கள் யார் தெரியுமா? எனது மாணவர்கள் அனைவரும் ஒருநாள் நான் மறுநாள் நீ என சண்டை போட்டு என்னை பார்த்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பிச்சையெடுத்து உயிர்வாழ எனக்கு விருப்பம் இல்லை ஆதலால் தான் நான் யாரிடமும் பணம் வாங்க வில்லை. எனக்கு நீங்கள் நல்லது செய்ய நினைத்தால் எனது இடத்தை பவன் கல்யானை வாங்கிக்க சொல்லுங்கள் அவர் கண்டிப்பாக என்னுடைய வில்வித்தை வீரர்களை பார்த்து கொள்வார்.

ஆதலால் கண்டிப்பாக நான் மரணிக்க போகிறேன் என எனக்கு தெரியும். எனவே நான் தயாராக இருக்கிறேன். அதற்காக இன்று எனக்கு பிடித்த உணவான திருப்பதி லட்டு, பேரிச்சை பழம், ரசகுல்லா, கடலை மிட்டாய், மாம்பழம் என பிடித்த அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வருகிறேன். பிடித்த புத்தகங்களை படித்து வருகிறேன். இப்பொழுது நான் வாழ்வதும் பேசுவதும் கடவுள் கொடுத்த கிருபையாக பார்க்கிறேன் என கூறினார்.

இப்படி தன் மரணத்திற்கு முன்பாக அனைத்தையும் சரியாக செய்து முடித்து நிம்மதி பெருமூச்சு விட்டு மறித்து போன இவரது உடல், தற்போது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பெசன்ட் நகரில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் அஞ்சலி செலுத்திய பின்பு அவரது உடல் கல்லூரிக்கும் இருதயம் வில்வித்தை மற்றும் கராத்தே மாணவர்களிடமும் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நான் கண்ட கனவு எல்லாம் பலிக்காமல் போனது... நடிகை சமந்தா உருக்கம்..!