சினிமா துறையில் ஜெனிலியா போன்ற நடிகைகளை பார்த்து நமக்கும் இதுபோன்ற பெண் வாழ்க்கையில் அமைந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி வாழ்க்கையை தொலைத்தவர்கள் அநேகர். இப்படி இருக்க, த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, சமந்தா உள்ளிட்ட பல நடிகைகள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கின்றனர். ஆனால் அதே சமயம் பல ஹீரோயின்கள் சினிமாவில் காணமால் போயிருக்கின்றனர்.

அப்படி, சினிமா துறையில் மறக்கடிக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் ஸ்ருத்திகா. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ எனும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் மறைந்த நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து ஆல்பம், தித்திக்குதே உள்ளிட்ட சில படங்களிலும் ஸ்ருத்திகா நடித்திருந்தார். ஆனால் அவையும் ஃபிளாப் ஆகிவிட்டது.
இதையும் படிங்க: ஒரே டீவி.. இரண்டு ஹீரோயின்... இந்த சீரியல் பிரபலத்துக்கு வளைகாப்பா..!

இதனால் சினிமா துறை எதிர்பார்த்தபடியான வெற்றியை கொடுக்கவில்லை என்பதால் நடிப்பதை நிறுத்திக் கொண்டு குடும்ப வாழ்க்கையை தேர்ந்தெடுத்த ஸ்ருதிகா அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்க,இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இந்த நிலையில், சினிமாவில் தனக்கு கிடைக்காத ரசிகர்களை சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் தனது ரசிகர்கர்களை பெற்றுக்கொள்ள நினைத்த ஸ்ருதிகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கலகலப்பான பேச்சாலும் சிரிப்பாலும் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.

அடுத்ததாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சல்மான்கானின் ஹோஸ்டிங்கில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வரும் பிக் பாஸ் ஹிந்தி 18வது ஷோவில் பங்கேற்றார் ஸ்ருதிகா அர்ஜுன்.

இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற முதல் தென்னிந்திய பிரபலம் என்ற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருந்த ஸ்ருதிகா வட இந்திய ரசிகர்களையும் இன்று தன் வசபடுத்தியுள்ளார்.

இப்படியிருக்க, தனது தம்பியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருத்திகா தனது புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: அன்னை தெரசாவா? எதுக்கு இவ்ளோ பில்டப்? பிரபல நடிகையை விளாசிய தமிழா தமிழா பாண்டியன்!!