தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் எந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம்பெற்று இருக்கிறாரோ அதேபோல் காமெடி நடிகரான சூரியும் மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்தவர். இவர்கள் இருவரின் காம்போவில் உருவான படங்களான மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, டான் போன்ற படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படங்களாக பார்க்கப்படுகிறது.
படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயனும், சூரியும் இருந்தால் அந்த பக்கம் தயவுசெய்து போகாதீங்க அவங்க 2 பேரும் நம்மளை வைத்து கலாய்க்க தொடங்கிடுவார்கள் என்று சொல்லும் அளவிற்கு சேட்டை செய்து வருபவர்கள்.

காரணம் என்னவெனில், இவர்கள் இருவரும் இணைந்தால் அப்படம் கலகலப்பான காமெடியாகத்தான் இருக்கும். இப்படி படத்தில் கலகலவென இருக்கும் இவர்கள் இருவரும் ஆப் ஸ்கீரினிலும் மிகவும் ஜாலியாக இருக்க கூடியவர்கள் தான். இப்படத்தில் இருந்தே இருவருக்குமான உறவு நீடித்து வருகிறது.
குறிப்பாக கருடன் பட விழாவில் சூரியை பார்த்து பேசிய சிவகார்த்திகேயன், விடுதலை படம் வாய்ப்பு கிடைத்தபோது அண்ணன் யோசிக்காதீர்கள் உடனே படத்தில் நடிங்க என்று சூரிக்கு ஊக்கம் அளித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க: விடுதலை 2 படத்திற்கு வந்த புது ஆஃபர்... உச்சக்கட்ட குஷியில் வெற்றிமாறன்!!

குறிப்பாக, 'சீமராஜா' படம் வெளியான சமயத்தில் பல்வேறு விதமான விமர்சனங்களை எதிர்கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன். அப்போது அவருக்கு ஆதரவாக பேசிய நடிகர் சூரி, தம்பி சிவா தப்பான படம் நடித்திருந்தால் நீங்கள் திட்டலாம். ஆனால், படம் சரியில்லை என்றால் அவர் என்ன செய்வார். அதனால், சிவகார்த்திகேயனை டார்கெட் செய்து திட்டுவது முறையற்றது என தெரிவித்திருந்தார் சூரி.

இந்த சூழலில், விடுதலை படத்திற்கு பிறகு காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்ட சூரி, அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடு்த்து ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், கருடன் படத்தை தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான 'மாமன்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மாமன் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சூரியை சிவகார்த்திகேயன் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்து நெகிழ்ந்து போன சூரி அவரை கட்டியணைத்து வரவேற்றார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்ணனுக்காக தம்பி வந்திருக்கிறேன் என்றும் தம்பியை நினைத்து பெருமைப்படுவது போன்று கேப்சனும் இந்த பதிவில் இடம்பிடித்துள்ளன.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக தயாராகும் அட்லீ படம்..! லண்டன் நிறுவனத்தை வாய்பிளக்க வைத்த ஸ்கிரிப்ட்..!